தெனாவட்டான முடிவினை கையில் எடுத்து போட்டியை கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா? – இதெல்லாம் தேவையா?

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 3-ஆம் தேதி நடைபெற்ற 48-ஆவது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் வலுவான அணியாக காட்சியளிக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத்துக்கு நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் 9 (6) ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி ஏமாற்ற 3 பவுண்டரி 1 சிக்சருடன் மற்றொரு தொடக்க வீரர் ரித்திமான் சாஹா 21 (17) ரன்களில் அவுட்டானார்.

Sai Sudharsan

- Advertisement -

அதனால் 34/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய குஜராத்தை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா 1 (7) ரன்னிலும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் 11 (14) ரன்களிலும் பஞ்சாப்பின் தரமான பந்து வீச்சில் அவுட்டாகி ஏமாற்றியதால் மீண்டும் அந்த அணி 67/4 என பின்னடைவை சந்தித்தது.

காப்பாற்றிய சுதர்சன்:
ஆனால் மறுபுறம் சுப்மன் கில் அவுட்டான பின் களமிறங்கி நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுப்பாகவும் அதேசமயம் அதிரடியாகவும் ரன்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு கை கொடுக்காமல் ராகுல் திவாடியா 11 (13) ரசித் கான் 0 (1) பிரதீப் சங்வான் 2 (5) லாக்கி பெர்குசன் 5 (3) என எதிர்புறம் வந்த வீரர்கள் அனைவரும் வரிசையாக பஞ்சாப்பின் அதிரடியான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி சென்றார்கள். ஆனாலும் மானம் காக்க தமிழனாய் போராடிய சுதர்சன் 5 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்து 65* (50) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்று காப்பாற்றியதால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த குஜராத் 143 என்ற சுமாரான ரன்களை மட்டுமே எடுத்தது.

Bhanuka Rajapaksa

பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் மிரட்டலாக செயல்பட்ட ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 144 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 1 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தாலும் அடுத்து களமிறங்கிய பனுக்கா ராஜபக்சவுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக குவிக்கத் தொடங்கினார். 2-வது விக்கெட்டுக்கு அதிரடியாக பேட்டிங் செய்த இந்த ஜோடி 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதிசெய்த நிலையில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 40 (28) ரன்கள் எடுத்த ராஜபக்சா ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பஞ்சாப் வெற்றி:
இருப்பினும் மறுபுறம் குஜராத்துக்கு தொல்லை கொடுக்கும் வகையில் தொடர்ந்து நங்கூரமாக நின்று ரன்களைச் சேர்த்த ஷிகர் தவான் அதிரடியாக 8 பவுண்டரி 1 சிக்சருடன் 62* (53) ரன்கள் எடுக்க அவருடன் ஜோடியாக விளையாட களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் வெறும் 10 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஷமி வீசிய ஒரே ஓவரில் 3 தொடர்ச்சியான சிக்ஸர் உட்பட 30* ரன்களை தெறிக்க விட்டு வெறித்தனமான பினிஷிங் கொடுத்ததால் 16-வது ஓவரிலேயே 145/2 ரன்கள் எடுத்த பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது.

dhawan

இந்த அதிரடியான வெற்றியால் பங்கேற்ற 10 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. மறுபுறம் பங்கேற்ற 10 போட்டிகளில் 2-வது தோல்வியை பதிவு செய்தாலும் ஏற்கனவே 8 வெற்றிகளைப் பெற்றுள்ள குஜராத் தொடர்ந்து புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக இன்னும் ஜொலிக்கிறது.

தேவையற்ற முடிவு:
முன்னதாக இந்த வருட ஐபிஎல் தொடரில் பெரும்பாலான கேப்டன்கள் டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானிக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதற்கு காரணம் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இதர அணிகளை காட்டிலும் கிடைக்காது என நினைத்த வெற்றியைக் கூட குஜராத் பெற்றிருந்தது.

gt

எடுத்துக்காட்டாக சென்னைக்கு எதிராக டேவிட் மில்லர் மிரட்டலாக பேட்டிங் செய்து 94* ரன்கள் விளாசி பெற்றுக்கொடுத்த வெற்றி, ஹைதராபாத்துக்கு எதிராக திவாடியா – ரசித் கான் ஆகியோர் ஜோடி போட்டு பறித்துக்கொடுத்த வெற்றி போன்ற எதிர்பாராத வெற்றிகளால் சேசிங்கில் நமது அணி மிக வலுவாக இருப்பதாக கருதிய பாண்டியா இம்முறை பேட்டிங் செய்து சோதித்துப் பார்க்கலாம் என்று தேவையில்லாமல் முடிவெடுத்தார். ஆனால் அதற்கேற்றார் போல் தமிழக வீரர் சாய் சுதர்சன் தவிர பாண்டியா உட்பட இதர வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியதால் இறுதியில் அவரின் அந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் முடிவு தேவையில்லாத விஷ பரீட்சையாக மாறி வெற்றி பாதையில் நடந்து கொண்டிருக்கும் குஜராத்துக்கு தோல்வியை பரிசளித்துள்ளது.

Advertisement