இவரின் பந்தில் எப்படி விளையாடுறதுனு எனக்கு புரியல ரொம்ப கஷ்டமா இருக்கு – நியூசி வீரர் புலம்பல்

Nz
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி 29ஆம் தேதி ஹாமில்டன் நகரில் நடைபெற உள்ளது.

Seifert

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது போட்டி குறித்து பேட்டியளித்த நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் சைபெட் கூறியதாவது : முதல் போட்டியில் இருந்தது போல பும்ராவின் பந்துவீச்சு இரண்டாவது போட்டியில் இல்லை. முதல் போட்டியில் பும்ராவின் பந்து மிகவும் மெதுவாக வந்தன. ஆனால் இரண்டாவது போட்டியில் புஜாரா தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு வித்தியாசமாக பேட்ஸ்மேனை நோக்கி அவர் வீசினார். இதனால் எங்களுக்கு விளையாடுவதற்கு மிக கடினமாக இருந்தது. அவர் பந்தை எவ்வாறு பிடித்து வீசுகிறார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில நேரங்களில் பந்து ஸ்டம்புக்கு நேராக வந்தால் அதை பேட்ஸ்மேன்கள் விலகி நின்று அடிக்க முடியும். ஆனால் அவ்வாறு பும்ராவின் பந்தினை அடிக்க முடியவில்லை.

Bumrah

இதனால் பும்ராவின் பந்துவீச்சில் எவ்வாறு விளையாட வேண்டும் என்று இந்திய வீரர்களிடம் டிப்ஸ் கேட்பது அவசியம் என்றும் கூறினார். முதலிரண்டு போட்டியில் தோற்றாலும் மீதமிருக்கும் போட்டிகளில் நிச்சயம் இந்திய அணிக்கு சவால் கொடுத்து மீண்டும் வெற்றிக்கு திரும்புவோம் என்று சைபர்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement