டி20 உ.கோ முன்னர் தெ.ஆ தொடரில் இந்த 3 இளம் புயல்களுக்கு சான்ஸ் கொடுங்க – சேவாக் அதிரடி பேட்டி

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதமாக மும்பை நகரில் பல எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடத்தைப் போலவே இம்முறையும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களை துள்ளிக்குதித்து எகிற வைத்து வருகிறது. இந்த தொடரில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் தேவையான வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போராடி வருகின்றன.

Kulcha Kuldeep yadav Chahal

கலக்கும் இளம் வீரர்கள்:
அதேபோல் ஒவ்வொரு சீசனை போலவே இம்முறையும் நிறைய இளம் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணிக்கு வெற்றிகளைத் தேடி கொடுத்து அனைவரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். அதேசமயம் பார்மை இழந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட குல்திப் யாதவ், யுஸ்வென்ற சஹால் போன்ற வீரர்கள் இந்த தொடரில் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை அள்ளி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்கான வேலையை கச்சிதமாக செய்து வருகின்றனர். அதேபோல் தினேஷ் கார்த்திக் கூட எப்படியாவது இந்திய அணிக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தில் எதிரணிகளை புரட்டி எடுத்து பினிசெராக உருவெடுத்து அசத்தலாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

சேவாக்கின் ஆலோசனை:
மேற்குறிப்பிட்ட வீரர்களைப் போல தங்களது அபார திறமையால் இந்திய அணிக்குள் நுழைய போராடும் அத்தனை வீரர்களுக்கும் விரைவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆம் வரும் மே 29-ஆம் தேதியுடன் ஐபிஎல் 2022 தொடர் நிறைவு பெறும் நிலையில் அதைத் தொடர்ந்து சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரும் ஜூன் 9 – 19 வரை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா விளையாட உள்ளது. அதில் ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sehwag

இந்நிலையில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்து விட்டு ஐபிஎல் தொடரில் அசத்தும் 3 இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 உலக கோப்பை வரவிருக்கும் இந்த தருணத்தில் வரும் ஜூனில் நடைபெறும் தென் ஆப்ரிக்க தொடரில் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்”

- Advertisement -

“அதில் சர்வதேச அணிகளுக்கு எதிராக அவர் (அர்ஷிதீப் சிங்) எவ்வாறு பந்து வீசுவார் என்பதையும் பார்க்க முடியும், அவருக்கும் சற்று அனுபவம் கிடைக்கும். அத்துடன் இங்கிலாந்தில் டி20 தொடர் நடைபெற உள்ளதால் முதன்மையான பவுலர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்குபவர்களை சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் தேர்வு செய்யலாம். உம்ரான் மாலிக், அவேஷ் கான், அர்ஷிதீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பளித்து முயற்சிக்கலாம்” என்று கூறினார்.

அவர் கூறும் இந்த 3 பவுலர்கள் ஐபிஎல் தொடரில் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். இதில் 16 – 20 வரையிலான கடைசி கட்ட ஓவர்களில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 48 பந்துகளை வீசியுள்ள பஞ்சாப் இளம் வீரர் அர்ஷிதீப் தீப் சிங் வெறும் 1 சிக்ஸரை கூட வழங்காமல் 50 ரன்களை மட்டுமே 6.1 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்து மிரட்டி வருகிறார். அதேபோல் லக்னோ அணிக்காக அசத்தும் மற்றொரு இளம் வீரர் அவேஷ் கான் 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இவர்களைவிட ஹைதராபாத்துக்கு விளையாடும் உம்ரான் மாலிக் 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்து பட்டைய கிளப்பி வருகிறார். எனவே வரும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுவதால் அதற்கு முன் ஜஸ்பிரித் பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்து இவர்களுக்கு சொந்த மண்ணில் வாய்ப்பளித்து டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக அவர்களின் திறமையை சோதிக்க வேண்டும் என சேவாக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Umran Malik 5 Fer

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் என்பது சர்வதேச கிரிக்கெட் தொடரைப் போன்று அனுபவத்தை இளம் வீரர்களுக்கு கொடுக்கிறது. எங்களது காலத்தில் கேமரா இல்லாமல் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய நாங்கள் திடீரென ரசிகர்கள் நிறைந்த நேரடியாக ஒளிபரப்பப்கூடிய சர்வதேச போட்டிகளில் விளையாடியது மிகப்பெரிய அழுத்தமாக இருந்தது.

இதையும் படிங்க : பெங்களூரு அணியின் தோல்விக்கு விராட் கோலி காரணமா? – வறுத்தெடுக்கும் ரசிகர்கள் (என்ன நடந்தது?)

ஆனால் ஐபிஎல் தொடரில் அவ்வாறு இல்லை என்பதால் இது சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஈடானது. இதில் ஒரே வித்தியாசம் என்னவெனில் சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணியில் டாப் பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக வெற்றிகரமாக பந்து வீசுவது மட்டுமே சவாலான ஒன்றாகும்” என கூறினார்.

Advertisement