ஷிகார் தவானின் இடத்திற்கு சரியான மாற்றுவீரர் இவர்தான் – இளம்வீரரை பாராட்டிய சேவாக்

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் இடதுகை தொடக்க வீரரான ஷிகார் தவான் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை கிட்டத்தட்ட 34 டெஸ்ட் போட்டிகள், 145 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இதுதவிர 184 ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார். சச்சின், சேவாக் ஜோடிக்கு பிறகு ரோகித் மற்றும் தவான் ஜோடி தான் இன்றளவும் சிறப்பான துவக்க ஜோடியாக இந்திய அணியில் இருந்து வருகிறது.

Dhawan 1

- Advertisement -

35 வயதாகும் தவான் தற்போது இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக செயல்பட்டு வருகிறார். டி20 போட்டிகளில் தான் இழந்த இடத்தை பெறுவதற்காக தற்போது ஐபிஎல் மற்றும் இலங்கை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் வரும் டி20 உலகக் கோப்பைக்கு ஷிகார் தவான் தேர்வு செய்யப்படுவார் என்றே தோன்றுகிறது.

அதேவேளையில் 35 வயதாகும் அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே விளையாட முடியும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தவானைப் போன்று அந்த இடத்தில் செயல்பட ஒரு வீரர் கிடைத்துவிட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Padikkal

இந்திய அணியில் ஷிகார் தவான் அவரது இடத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் அந்த இடத்தில் சரியான மாற்று வீரராக இளம் வீரரான படிக்கல் திகழ்வார். அவர் விளையாடி வரும் விதம் அபாரமாக இருக்கிறது. மேலும் அவர் விளையாடுவதை நான் நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்த சேவாக் ஐபிஎல் தொடரில் அவர் அடித்த செஞ்சுரி அவர் எப்படிப்பட்ட திறமையான வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

padikkal

இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியும் போது அறிமுகமான படிக்கல் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் இனி வரும் ஐபிஎல் தொடர் மற்றும் எதிர்வரும் தொடர்களில் இடம் பெறும் பட்சத்தில் அவர் நிச்சயம் இந்திய அணியின் அடுத்த துவக்க வீரர் ஆக மாற அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement