கோமா நிலையில் இருப்பது மாதிரி ரொம்ப மந்தமா ஆடுறாங்க. முன்னணி அணியை விளாசிய – சேவாக் காட்டம்

virender sehwag
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக விராட் கோலி 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 39 ரன்களையும் குவித்தனர். சென்னை அணி சார்பாக சாம் கரன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய ருதுராஜ் 51 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் தோனியும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஒரு ஆறுதலான வெற்றியை அடைந்துள்ளது.

csk

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியின் தோல்வி குறித்து பேசிய சேவாக் கூறுகையில் : பெங்களூர் அணி இந்த ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினால் அதில் அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை என போட்டிக்கு முன்பே சொல்லியிருந்தேன். அதனை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை நான் ஜோக் செய்கிறேன் என்று நினைத்தார்கள். ஆனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு சுமாரான தொடக்கத்தையே கண்டது.

green

அதன் பின்னர் கோலி-டிவில்லியர்ஸ் ஜோடி 7 ஆவது ஓவரில் இருந்து 18-வது ஓவரை பேட்டிங் செய்தாலும் ரொம்ப ஸ்லோவா ஆடினார்கள். அதனால் அவர்களது ஆட்டத்தை பார்த்த நான் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு எழுந்து வந்து பார்த்தபோதும் அதேபோன்றுதான் ஆடி இருந்தார்கள் என்று பெங்களூரின் பொறுமையான ஆட்டத்தை விமர்சையாக கிண்டல் செய்துள்ளார் சேவாக்.

Advertisement