ரஹானேவை நீக்கும் முன் அவருக்கு இந்த ஒரு வாய்ப்பை மட்டும் வழங்குங்கள் – சேவாக் கோரிக்கை

sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5வது போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சில சொதப்பல்களில் ஈடுபட்டனர்.

INDvsENG

- Advertisement -

ஆனாலும் இதில் அதிக அளவு விமர்சனத்துக்கு உள்ளானவர் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே தான். ஏனெனில் இந்த தொடர் முழுவதும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் ஏழு இன்னிங்ஸ்களில் மொத்தம் 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 19 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 372 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் மிடில் ஆர்டரில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் அதிக அளவில் இருந்து வருகின்றன. இந்நிலையில் ரஹானேவை உடனடியாக நீக்க கூடாது என்றும் அவருக்கு சில வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ; ஒரு பேட்ஸ்மேன் வெளிநாட்டு தொடரில் மோசமாக விளையாடினால் அவருக்கு உள்நாட்டு தொடரில் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.

Rahane-1

ஏனெனில் வெளிநாட்டு தொடர்கள் நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் நடைபெறும் ஆனால் இந்திய வீரர்கள் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் விளையாட முடியும். இதன் காரணமாக அவருக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கவேண்டும். பொதுவாகவே நல்ல பேட்ஸ்மேன்கள் எட்டு முதல் ஒன்பது போட்டிகள் வரை மோசமாக விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன்.

Rahane

ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர்கள் ஒரு ஆண்டில் 1200 முதல் 1500 ரன்கள் வரை அடிப்பார்கள். அந்த வகையில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் ரஹானேவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அதில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை வெளியேற்றுவது சரியான காரணமாக இருக்கும் என சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement