- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியை விட பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சாதிப்பார். அதன் காரணம் இதுதான் – சேவாக் ஓபன் டாக்

தோனி கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து தனது ஓய்வு முடிவினை அறிவித்தார். அதன்பிறகு அவரது இடத்தில் சகா மற்றும் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் ஆகிய வீரர்கள் களம் இறங்கி விளையாடி வந்தனர். ஆனால் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பினை அவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்திய அணிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு இறுதியில் இங்கிலாந்து தொடரின்போது பண்ட் தேர்வானார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் 696 ரன்களை குவித்துள்ளார் இதில் இரண்டு சதங்கள் அடங்கும். அந்த 2 சதங்களும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அடிக்க பட்டவையாகும். இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் பண்ட் இடம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக சில போட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவரது ஷாட்டுகளை சரியாக தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் அவர் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடும் தகுதியுடையவர். தோனிக்கு சரியான மாற்று வீரராக நான் பண்ட்டை பார்க்கிறேன். மேலும் இன்னும் மூன்று, நான்கு ஆண்டுகளில் அவர் இந்திய அணியின் துவக்க வீரராக டெஸ்ட் போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் டெஸ்ட் போட்டிகளின் துவக்க வீரராக களமிறங்க அனைத்து தகுதிகளும் பண்ட் வசம் உள்ளதாக நான் பார்க்கிறேன். எனவே தோனிக்கு அடுத்து எனக்கு தெரிந்து திறமையான வீரர் பண்ட் என்றே கூறுவேன். அவர் நிச்சயம் டெஸ்ட் போட்டியில் சாதிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று பண்ட் குறித்து சேவாக் கூறினார்.

- Advertisement -
Published by