பாகிஸ்தான் அணி தோற்றதற்கு ஹசன் அலி காரணமா? சரியான காரணத்தை கூறிய – வீரேந்திர சேவாக்

Sehwag
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதியானது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது தனது இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனை அடுத்து வரும் 14-ஆம் தேதி நாளை நடைபெறவிருக்கும் முக்கியமான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

wade 1

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றும் என்பதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து பல்வேறு வீரர்களும் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி கைவிட்ட கேட்சின் மூலம் தான் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில் : பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைய ஹசன் அலி மட்டும் காரணம் இல்லை. ஏனெனில் 19 ஓவரில் அவர் கேட்சை தவற விட்ட பிறகு அடுத்த 3 சிக்சர்கள் அடிக்கப்பட்டது.

Hasan-ali

இதன் காரணமாக ஒரு தனிப்பட்ட வீரரின் சொதப்பல் காரணமாக இந்தத் தோல்வி நிகழவில்லை என்றும் ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக செயல்பட தவறியதன் காரணமாக இந்த தோல்வி அமைந்தது என்றும் சேவாக் கூறியுள்ளார். மேலும் முக்கியமாக முக்கியமான இதுபோன்ற போட்டிகளில் ஒரு பந்தில் ஆட்டம் மாறாது என்றும் ஒட்டுமொத்த அணியாக செய்யும் தவறுகளின் காரணமாகவே இதுபோன்ற தோல்விகள் அமையும் என்றும் சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து? ஆஸ்திரேலியா? டி20 உலகக்கோப்பையை கைப்பற்றப்போவது யார் ? – ஷேன் வார்ன் கணிப்பு

அதன்படி இந்த தோல்விக்கு காரணமாக ஹசன் அலியை பார்க்கவில்லை என்றும் பாகிஸ்தான் அணிக்கு மொத்தமாக பீல்டிங்க்கும் ஏற்பட்ட தோல்வி என்று கூறலாம். அடுத்ததாக நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோதுவதால் இந்த தொடரில் நிச்சயம் ஒரு புது அணி டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றுவது நிச்சயம்.

Advertisement