நியூசிலாந்து? ஆஸ்திரேலியா? டி20 உலகக்கோப்பையை கைப்பற்றப்போவது யார் ? – ஷேன் வார்ன் கணிப்பு

Warne
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளதால் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

nzvsaus

- Advertisement -

நாளை 14-ஆம் தேதி நடைபெற உள்ள முக்கியமான அந்த இறுதிப்போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை அதிர்ஷ்டவசமின்றி கோட்டைவிட்ட நியூசிலாந்து அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்ல காத்திருக்கிறது. அதேபோன்று 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது இல்லை என்பதனால் ஆஸ்திரேலிய அணியும் இந்த கோப்பையின் மீது ஒரு கண் வைத்துள்ளது.

wade 2

இந்நிலையில் இந்த முக்கியமான இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்ன் கணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த உலக கோப்பை தொடரில் சூப்பர் 12-சுற்றில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்து உள்ளது. அதனால் இந்த உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன நடந்தாலும் விராட் கோலி இந்த ஒரு பதவியை விட்டுதரக்கூடாது – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

மேலும் தொடர்ந்து பல சரிவுகளை ஆஸ்திரேலிய அணி சந்தித்திருந்தாலும் உலக கோப்பை தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று தான் நினைப்பதாக ஷேன் வார்ன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement