என்ன நடந்தாலும் விராட் கோலி இந்த ஒரு பதவியை விட்டுதரக்கூடாது – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

Shastri
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட்கோலி நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றோடு இந்திய அணி வெளியேறியதை தொடர்ந்து டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். மேலும் தான் பணிச்சுமை காரணமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்து இருந்தார்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலியின் செயல்பாடு மீது அதிருப்தியில் இருக்கும் பி.சி.சி.ஐ-யானது அவரை டெஸ்ட் போட்டியில் மட்டுமே கேப்டனாக செயல்பட விரும்புகிறது. அதேவேளையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட விரும்பப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும், இந்த உலகக் கோப்பைத் தொடரோடு தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறி உள்ளதால் இந்திய அணி குறித்த பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : விராட் கோலி டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் ஆனால் அது எப்போது என்று என்னால் கூற முடியாது. ஏனெனில் விராட் கோலி தற்போது தனது பேட்டிங்கில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதன் காரணமாக நிச்சயம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியை துறக்கலாம்.

kohli 1

இருந்தாலும் கோலியின் அதிரடி முடிவு எப்போது நிகழும் என்று எனக்கு சரியாக தெரியாது என்று கூறியுள்ளார். அதே வேளையில் அவர் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்ன நடந்தாலும் விராட் கோலி டெஸ்ட் அணியை கைவிடக் கூடாது. ஏனெனில் கடந்த 5 ஆண்டுகளாக டெஸ்ட் அணியை நம்பர் ஒன் அணியாக விராட் கோலி வைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹனுமா விஹாரியை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாததன் காரணம் இதுதானாம் – வெளியான தகவல்

டெஸ்ட் கேப்டன் பதவியிலும், பேட்டிங்கிலும் அவர் நிச்சயம் கவனம் செலுத்தவேண்டும். இதன் காரணமாகவே அவர் டெஸ்ட் கேப்டன்சியை கைவிடக் கூடாது என ரவிசாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டி20 கேப்டன் கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் பதவியை துறந்த விராட் கோலிக்கு தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய அழுத்தங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement