ஹனுமா விஹாரியை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாததன் காரணம் இதுதானாம் – வெளியான தகவல்

Vihari
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட டெஸ்ட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, பும்ரா, ஷமி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேப்டன் விராட் கோலிக்கும் முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இரண்டாவது போட்டியில் அணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி இடம்பெறாதது அனைவர் மத்தியிலும் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

IND

- Advertisement -

இந்திய அணிக்காக விஹாரி கடைசியாக சிட்னி போட்டியில் விளையாடிய ஆட்டம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடிய அவரது அந்த இன்னிங்ஸ் அந்த போட்டியை டிரா செய்ய உதவியது. அதற்கடுத்து இங்கிலாந்து தொடருக்கு முன் அங்கு சென்று கவுண்டி போட்டியில் விளையாடிய அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் பென்ச்சில் அமரவைக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியிலும் அவரது பெயர் இடம்பெறாதது அனைவரது மத்தியிலும் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் விகாரியை அணியில் சேர்க்காததற்கு என்ன காரணம் ? என்றும் அனைவரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவர் ஏன் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது.

Vihari

அதன்படி தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய ஏ அணி அங்கு நடைபெறவுள்ள 3 (நான்கு நாட்கள்) கொண்ட போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்ட போது விஹாரியின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் அடுத்த சிறிது நேரத்தில் கடைசியாக அவரது பெயர் சேர்க்கப்பட்டது. மேலும் செலக்டர்ஸ் இதுகுறித்து கூறுகையில் : விஹாரி தற்போது தென்னாபிரிக்கா சென்று விளையாடும் பட்சத்தில் அடுத்ததாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அது அணிக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா நியூசிலாந்து தொடரில் இருந்து தானாக முன்வந்து விலகிய நட்சத்திர வீரர் – பெரும் பின்னடைவு

மேலும் இந்திய முதன்மை அணி தென்னாபிரிக்கா பயணிக்கும்போது அந்த தொடரில் விஹாரி சிறப்பாக பேட்டிங் செய்ய தற்போதைய இந்திய ஏ அணி பயணம் அவருக்கு உதவும் என்றும் தற்போது காரணத்தை சொல்லியுள்ளனர். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விஹாரி ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதத்துடன் 624 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement