இந்தியா நியூசிலாந்து தொடரில் இருந்து தானாக முன்வந்து விலகிய நட்சத்திர வீரர் – பெரும் பின்னடைவு

INDvsNZ
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த இறுதிப்போட்டி முடிந்த கையோடு அதனைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி இங்கு நடைபெற இருக்கும் 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

nzvsaus

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டி20 தொடரில் ரோகித் சர்மாவும், டெஸ்ட் தொடருக்கு (ரஹானே-1st டெஸ்ட், விராட் கோலி 2nd -டெஸ்ட்) கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த முக்கியமான தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான டேவன் கான்வே விலகி உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் போது தான் ஆட்டமிழந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத விரக்தியில் தனது பேட்டை ஓங்கி குத்திய டேவன் கான்வே தனது கையில் காயமடைந்தார்.

conway

பின்னர் பரிசோதனையின் போது அவர் பேட்டினை வேகமாக ஓங்கி குத்தியதால் அவரது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளதால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை டேவன் கான்வே தவறவிட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இவரை ஏன் சேக்கல – ஹர்ஷா போக்ளே கொந்தளிப்பு

அதோடு சேர்ந்து தற்போது இந்திய தொடரில் இருந்தும் அவர் விலகுவதாக தானாக முன்வந்து அறிவித்துள்ளார். அவரது இந்த விலகல் நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement