தோனி பண்ணது நியாயப்படி தப்பு அவரை தடை பண்ணியிருக்கணும் – வீரேந்திர சேவாக் கருத்து

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மூன்று விதமான ஐசிசி கோப்பையையும் பெற்று தந்த பெருமை உடையவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தது போன்றே ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியை ஐந்து முறை கோப்பையை வெள்ள வைத்து சாம்பியன் அணியாக வைத்திருக்கும் தோனி களத்தில் தனது பொறுமையான அணுகுமுறை காரணமாக அதிக அளவு பாராட்டுகளை பெற்றவர்.

- Advertisement -

ரசிகர்கள் மத்தியில் மத்தியில் மிஸ்டர் “கூல் கேப்டன்” என்கிற பட்டத்துடன் திகழும் தோனி எந்த ஒரு சூழலிலும் தனது பொறுமையை இழக்காமல் நிதானமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். இருந்தாலும் மைதானத்தில் அவர் ஒரு சில நேரத்தில் கோபப்படும் விடயங்கள் பெரிய அளவில் அனைவரது மத்தியிலும் பேசப்படும்.

அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வை முன்வைத்து வீரேந்திர சேவாக் தோனி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Dhoni

2019 ஆம் ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அப்போது களத்தில் இருந்த அம்பயர் நோபல் கொடுக்காமல் விட்டுவிட்டார். ஆனால் அப்போது களத்திற்கு உள்ளே வந்த தோனி அம்பயருடன் வாக்குவாதம் செய்தார்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை தோனி செய்தது தவறு. அவருடைய அந்த செயலுக்காக குறைந்தபட்சம் இரண்டு மூன்று போட்டிகளிலாவது அவரை தடை செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் இது போன்ற செயல்களை செய்தால் நாளை வேறு ஒரு கேப்டன் அவரைப் பார்த்து இதே போன்ற செயலில் ஈடுபடலாம். எனவே அம்பயருடன் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு என்று சேவாக் சுட்டிக்காட்டி பேசி உள்ளார்.

இதையும் படிங்க : 2011இல் யுவராஜ் மாதிரி 2023 உ.கோ ஜெயிக்க அவர் ஆல் ரவுண்டரா ஹெல்ப் பண்ணுவாரு – தரமான வீரரை ஆதரித்த ஸ்ரீகாந்த்

சேவாக் குறிப்பிட்டது போன்றே களத்தில் அம்பயருடன் தோனி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது சமூக வலைத்தளத்தில் அதிக அளவு பேசப்பட்ட விடயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement