Worldcup : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் 4 ஆவது வீரராக இறங்கும் திட்டம் இதுதான் – சேவாக்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

sehwag
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உலக கோப்பை தொடரின் நான்காவது வீரராக களமிறங்கும் வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது : உலக கோப்பை தொடரில் இந்திய அணி நான்காவது வீரராக களமிறங்கும் வீரர் குறித்து பல நாட்களாக பல கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஆனால், என் கருத்துப்படி தொடரின் ஆரம்ப போட்டிகளில் விஜய்சங்கர் நான்காவது வீரராக ஆடலாம்.

Karthik

பிறகு முக்கிய போட்டிகளில் விளையாட இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் யார் வேண்டுமானாலும் நான்காவது இடத்தில் யார் வேண்டுமானாலும் களமிறங்கி நான்காவதாக ஆடலாம். ஏனெனில் இந்திய அணியின் வீரர்கள் சமபலத்துடன் உள்ளனர். ராகுல், தினேஷ் கார்த்திக், ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் போன்றோர் நான்காவது வீரராக ஆடும் தகுதி உடையவர்கள் என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement