தோனி மட்டும் தற்போது அணியில் இருந்திருந்தால் சூப்பர் ஓவரில் இந்த தவறான முடிவை எடுத்திருக்க மாட்டார் – சேவாக் பேட்டி

Sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் 179 ரன்களை அடிக்க ஆட்டம் டையில் முடிந்தது. அதன்பின்னர் சூப்பர் ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைக்க இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து மண்ணில் தனது முதல் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

Shami 1

- Advertisement -

இந்தப்போட்டியில் முக்கியமான சூப்பர் ஓவரை 4 ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்த பும்ராவிற்கு கோலி வழங்கினார். ஆனால் இந்த போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை விட ஷமி சிறப்பாக வீசி இருந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 8 ரன்களை மட்டும் கொடுத்து போட்டியை டை ஆக்கினார்.

எனவே ஷமிக்கு சூப்பர் ஓவரை வழங்கியிருக்க வேண்டும் என்று தற்போது பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விடயம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : என்னால் இதனை நிச்சயமாக சொல்ல முடியும். தோனி அணியின் கேப்டனாக இருந்தால் நிச்சயம் பும்ராவிற்கு சூப்பர் ஓவர் வீசும் வாய்ப்பை கொடுத்திருக்க மாட்டார்.

India

ஏனென்றால் அவருக்கு நேற்று சரியான நாளாக அமையவில்லை. பும்ரா ஒரு சிறந்த பவுலர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை ஆனால் நேற்றைய போட்டியில் அவருக்கு சிறந்த நாள் இல்லை அது அவருக்கே தெரியும். என்னை பொறுத்தவரை நேற்று தோனி மட்டும் இருந்திருந்தால் ஜடேஜா அல்லது சாஹல் ஆகிய இருவரில் ஒருவரை சூப்பர் ஓவரை வீச அழைத்திருப்பார் என்று சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement