- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர் ஒரு சாம்பியன் பிளேயர். அவரை திட்டாதீங்க ப்ளீஸ் – இந்திய வீரருக்காக குரல் கொடுத்த சேவாக்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 151 ரன்களை மட்டுமே குவித்தனர். அதிகபட்சமாக விராட் கோலி 57 ரன்களும், பண்ட் 39 ரன்களையும் குவித்தனர்.

அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 152 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் செயல்பாடு மிக மோசமாக அமைந்தது. 5 பந்துவீச்சாளர்கள் பந்து வீசியும் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 3.5 ஓவர்கள் பந்து வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

இதன் காரணமாக சமூக தளத்தில் ரசிகர்கள் பலரும் ஷமியை விமர்சித்து காட்டமான சில கருத்துக்களை முன் வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களின் இந்த செயலை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் இதுகுறித்து குரலெழுப்பிய சேவாக் குறிப்பிடுகையில் : முகமது ஷமி மீது இணையத்தில் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டு அதிர்ச்சி அடைகிறேன். இந்த நேரத்தில் நாம் அவருடன் துணை நிற்க வேண்டும்.

ஏனெனில் இது ஒரு போட்டியில் ஏற்பட்ட தோல்விதான். ஆனால் அவர் ஒரு சாம்பியன் வீரர் மேலும் இந்த நீங்கள் ட்ரால் செய்வதை விட அவருக்கு சப்போர்ட்டாக இருந்தால் நிச்சயம் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். நீங்கள் இங்கு அவரை விமர்சித்து வருகிறீர்கள். ஆனால் அவர் இந்திய அணிக்காக இந்திய சீருடை அணிந்து விளையாடுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸ்பிட்டல் போனவர அப்படியே டீம்ல இருந்து தூக்கிடுங்க. அப்போதான் இந்தியா ஜெயிக்கும் – கடுப்பாகிய ரசிகர்கள்

எனவே அதை மனதில் வைத்துக் கொண்டு அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் இந்திய அணி இது போன்ற முக்கியமான போட்டிகளில் தோல்வி அடையும்போது கண்டனங்கள் எழுவது சாதாரண விடயம்தான். இருப்பினும் அதையெல்லாம் கடந்து இந்திய அணி நிச்சயம் மீண்டு வரும் என்று நம்பலாம்.

- Advertisement -
Published by