
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது விளையாடிய இந்திய அணி 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் 76 ரன்களில் சுருண்டு 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் ஏற்கனவே தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றால் கூட இந்த தொடரை சமன் செய்ய மட்டுமே வாய்ப்புள்ளது. ஏற்கனவே டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் சூரியகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட வேளையில் இந்த அடுத்தடுத்த தோல்விகள் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இவ்வேளையில் நேற்றைய இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை தகர்த்துள்ளார்.
அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் அக்சர் பட்டேல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக 99-ஆவது போட்டியில் விளையாடினார்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை விளையாட வைக்கனும்னா இதுதான் வழி.. இல்லனா அவரை சேக்காதீங்க – அபிஷேக் நாயர் கருத்து
இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடி ஐந்தாவது இடத்திலிருந்து தோனியை அவருக்கு பின்னுக்கு தள்ளியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு அக்சர் பட்டேல் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 99 ஆட்டங்களில் விளையாடி 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.