விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி பிக்சிங் செய்யப்பட்டதா? ஷாக்கான சேவாக் – வெடித்த புதிய சர்ச்சை

Sehwag
- Advertisement -

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இலங்கை அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்று வருகிறது. தனது சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கியது. இந்த தொடரிலிருந்து புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பின் நீக்கப்பட்டுள்ள புஜாரா மற்றும் ரகானே ஆகியோருக்குப் பதிலாக ஹனுமா விஹாரி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

- Advertisement -

100வது டெஸ்ட் விராட் கோலி:
இப்போட்டியில் களமிறங்கிய முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைத்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் முக்கிய முதுகெலும்பு வீரராகக் கருதப்படும் அவர் கடந்த காலங்களில் ஏராளமான ரன்கள் குவித்து இந்தியாவிற்கு பல வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

மேலும் 2014 – 2021 வரையிலான காலகட்டங்களில் கேப்டனாகவும் செயல்பட்ட அவர் பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை தொடர்ந்து 5 வருடங்கள் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். அத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் 40 வெற்றிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான இந்திய கேப்டனான சாதனை படைத்துள்ளார். இவ்வளவு சாதனைகளை படைத்துள்ள அவருக்கு சிறப்பு தொப்பியை அளித்து பிசிசிஐ கௌரவப்படுத்தியது.

- Advertisement -

வாயை பிளந்த சேவாக்:
இந்த மைல்கள் போட்டியில் நீண்ட காலமாக அடிக்க முடியாமல் திணறி வரும் 71வது சதத்தை விராட் கோலி அடிப்பாரா மற்றும் இப்போட்டியில் எவ்வளவு ரன்களை அடிப்பார் என கடந்த சில நாட்களாகவே இந்திய ரசிகர்கள் தங்களது கணிப்புகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தார்கள். அந்த வகையில் “தனது 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க மாட்டார். அவர் 4 அற்புதமான கவர் டிரைவ் ஷாட்கள் அடித்து 100 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் எடுத்திருக்கும் போது இலங்கை பவுலர் எம்புல்தெனியாவுக்கு எதிராக போல்ட்டாவார். அதன் காரணமாக அதிர்ச்சி அடைந்து ஏமாற்றத்துடன் தனது தலையை தொங்கப் போட்டுக் கொண்டே நடந்து செல்வார்” என ஒரு ரசிகை கணித்திருந்தார்.

அந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் அந்த ரசிகை கூறியது போலவே அற்புதமான கவர் டிரைவ் பவுண்டரிகளை அடித்து அபாரமாக தொடங்கிய விராட் கோலி 45 ரன்கள் எடுத்திருந்த போது இலங்கை பவுலர் எம்புல்தெனியா வீசிய பந்தில் போல்டாகி அதிர்ச்சியுடன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டே பெவிலியன் சென்றார். அந்த ரசிகை கூறியது போலவே கனகச்சிதமாக நடந்ததை பார்த்து பலரும் வாயடைத்துப் போகிறார்கள். குறிப்பாக இதைப்பார்த்த இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் “வாவ்” என பதிவிட்டுள்ளார். இந்த அளவுக்கு துல்லியமாக முன்கூட்டியே ஒருவர் கணித்துள்ளார் என்றால் மொஹாலியில் நடைபெறும் விராட் கோலியின் 100வது போட்டி பிக்சிங் செய்யப்பட்டதா என்ற கேள்வியை ஒரு சில ரசிகர்கள் எழுப்புகிறார்கள்.

ஃபிக்சிங் இல்லை:
இருப்பினும் அந்த ரசிகை கணித்ததில் அனைத்துமே நடைபெறவில்லை. ஏனெனில் 100 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகளை விராட் கோலி அடிப்பார் என அந்த ரசிகை கணித்திருந்தார். ஆனால் உண்மையாக 4 பவுண்டரிகளை அடித்த விராட் கோலி 76 பந்துகள் சந்தித்திருந்த போது ஆட்டமிழந்தார். எனவே இந்த போட்டி நிச்சயமாக கண்டிப்பாக பிக்சிங் செய்யப்படவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. இருப்பினும் அந்த அளவுக்கு 99% துல்லியமாக கணித்த அந்த ரசிகையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த போட்டியில் விராட் கோலி 71 ஆவது சதத்தை அடிக்க தவற விட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை குவித்த 6வது இந்திய வீரர் என்ற சூப்பர் சாதனையும் படைத்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளுக்கு பின் அதிக ரன்கள் குவித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களுக்கு பின் பெற்றார்.

Advertisement