கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது நடப்பு சாம்பியனாக நேற்று மார்ச் 22-ஆம் தேதி நடைபெற்ற 2025 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்று விளையாடியது. பெங்களூரு அணிக்கெதிரான நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே குவித்தது.
ரிங்கு சிங் ஆடியது மோசமான ஷாட் : விரேந்தர் சேவாக்
அதனை தொடர்ந்து 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி முதல் 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்து அதிரடியாக விளையாடியிருந்தாலும் அதற்கடுத்த பத்து ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே அந்த அணி சரிவை நோக்கி பயணித்தது.
அதிலும் குறிப்பாக கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங் போன்றோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அந்த அணியின் ரன் குவிப்பு வேகத்தை முற்றிலுமாக பாதித்திருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் தோல்வியையும் சந்தித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் 10 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் மட்டுமே அடித்த ரிங்கு சிங்கை இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கடுமையாக விளாசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரிங்கு சிங் இந்த போட்டியில் ஆட்டமிழந்த விதம் மிகவும் மோசமானது. அந்த பந்து அடிப்பதற்கான பந்தே கிடையாது.
அவரது மோசமான ஷாட் செலக்சன் காரணமாகவே அவரது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்து இருக்கிறார். அவர் விளையாடும் விதத்தை பார்க்கும்போது ரசிகர்களே அவர் அவுட் ஆக வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஏனெனில் அவருக்கு பின்னால் ரசல் பேட்டிங் செய்ய வருவார் என்பதால் ரிங்கு அவுட் ஆவதையே ரசிகர்களும் விரும்புவார்கள் என்று சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க : அது என்னோட அணி.. வீல் சேர்ல இருந்தாலும் நான் போய் விளையாடுவேன்.. சி.எஸ்.கே குறித்து – மனம்திறந்த தோனி
கடந்த 2023-ஆம் ஆண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்த ரிங்கு சிங் கடந்த ஆண்டு சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த வேளையில் இந்த ஆண்டும் அவருக்கு மோசமான துவக்கம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



