அது என்னோட அணி.. வீல் சேர்ல இருந்தாலும் நான் போய் விளையாடுவேன்.. சி.எஸ்.கே குறித்து – மனம்திறந்த தோனி

MS Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும் 43 வயதாகும் தோனி இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வரை கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் கடந்த ஆண்டிலிருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார்.

சி.எஸ்.கே என் டீம்.. வீல் சேர்ல இருந்தாலும் விளையாடுவேன் : எம்.எஸ் தோனி

கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரே அவருக்கு கடைசி தொடராக பார்க்கப்பட்ட வேளையில் ரசிகர்களின் அன்புக்காகவும், ஆதரவிற்காகவும் தான் மேலும் ஒரு ஆண்டு விளையாட விரும்புவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை அணியின் நிர்வாகம் அவரை அன் கேப்டு வீரராக 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது.

- Advertisement -

சர்வதேச போட்டிகளில் தற்போது விளையாடவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் இன்றளவும் தோனி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாட வேண்டும் என்று ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த 2025-ஆம் ஆண்டிற்கான சிஎஸ்கே அணியின் முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்த போட்டியிலும் தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக ஜியோ ஹாட்ஸ்டார் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி தனது ஓய்வு குறித்த எதிர்கால முடிவு குறித்து ஒரு கருத்தினை நகைச்சுவையாக பகிர்ந்து இருப்பது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் தோனி பேசுகையில் கூறியதாவது :

- Advertisement -

“நிச்சயம் நான் சிஎஸ்கே அணிக்காக எவ்வளவு ஆண்டுகள் விளையாட விரும்புகிறேனோ அவ்வளவு தூரம் விளையாடுவேன்”, ஏனெனில் “அது என்னுடைய அணி”, “நான் வீல்சேரில் இருந்தால் கூட என்னை அழைத்துக் கொண்டு சென்று விளையாட வைப்பார்கள்” என்று சிரித்தபடி கூறினார். ஏற்கனவே சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அளித்த பேட்டியில் :

இதையும் படிங்க : சி.எஸ்.கே மும்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? வெளியான வானிலை அறிக்கை – விவரம் இதோ

43 வயதானாலும் தோனி இன்றளவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பயிற்சியில் பெரிய பெரிய சிக்ஸர்களை அடித்து பயிற்சி எடுக்கிறார். எனவே இந்த தொடரிலும் அவர் அசத்துவார் என்று தான் நினைப்பதாகவும், பிளேயிங் லெவனில் அவர் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பது குறித்து கருத்தினை இப்போது தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement