சி.எஸ்.கே மும்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? வெளியான வானிலை அறிக்கை – விவரம் இதோ

CSK vs MI
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நேற்று மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தியது. அதற்கடுத்து இன்று இந்த தொடரின் மிக முக்கியமான மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

சி.எஸ்.கே மும்பை போட்டியில் ஏற்படவுள்ள சிக்கல் :

இதற்காக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூரியகுமார் யாதவ் தலைமையில் மும்பை அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி நடைபெறுவதில் ஒரு சிறிய சிக்கல் இருப்பதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி இந்த போட்டி நடைபெறவுள்ள நேரத்திற்கு முன்பாக மழை பெய்யும் என வானிலை அறிக்கை உள்ளது. இருந்தாலும் மழை பெய்யும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதனால் அது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் ஏற்படுத்தும் விதமாக அமையலாம்.

போட்டி நடைபெற இருக்கும் 7:30 மணிக்குள் 5 மணியளவில் 34 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோன்று 6 மணி அளவில் 23 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாலும் போட்டி நேரத்துக்கு முன்பாக மழை பெய்தால் நிச்சயம் சில ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே ஒரு சில மாற்றங்கள் இந்த போட்டியில் ஏற்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

ஒருவேளை இரண்டாம் பாதியிலும் மழை பெய்தால் டக் வொர்த் லூயிஸ் முறை கொண்டு வரப்படும். சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் மந்தமான ஆடுகளமாக பார்க்கப்படுவதால் இரு அணிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் ஆதிக்கத்தை செலுத்த அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : தோனியை யார்தான் கண்ட்ரோல் பண்ணாங்க? கத்துக் கொடுத்தவருக்கு சவால் கொடுப்பது பற்றி.. சூரியகுமார் பேட்டி

சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியினை ஆன்லைனில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மூலமாகவும், தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சியிலும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement