நல்லாதான இருக்காரு இவரை ஏன் அணியில் சேக்கல. பி.சி.சி.ஐ க்கு எதிராக நேரடியாக கேள்வி கேட்ட – சேவாக்

sehwag

ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவிற்கு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட முடியவில்லை. அதனால் மும்பை அணிக்கு கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் எஞ்சிருக்கும் போட்டிகளிலும் ரோகித் விளையாட மாட்டார் எனவும் தற்காலிக கேப்டனாக பொல்லார்ட் தொடர்வார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

rohith

ஆனால் இதற்கிடையே தற்போது நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா இடம்பெற்ற விளையாடினார். இதுமட்டுமின்றி இந்த காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேலும் அவருக்கு பதிலாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மேலும் ரோகித் சர்மா காயம் அடைந்து இருப்பதால் அவரை மருத்துவக்குழு கண்காணித்து வருகின்றனர். அதனால் எங்களால் இந்த விடயத்தில் தலையிட முடியாது எனவும் அவர் குறித்த அனைத்து அறிக்கைகளையும் மருத்துவக் குழுவினர் வெளியிடுவார்கள் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்திருந்தார். ஆனால் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று கூறப்பட்ட ரோகித் நேற்றைய போட்டியில் களமிறங்கி விளையாடினார்.

rohith 1

இந்நிலையில் இந்த விடயம் குறித்து தற்போது பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐக்கு கேள்வி ஒன்றினை தொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் : ரோஹித் காயமடைந்து உள்ளார் என்றால் அவர் ஏன் நேற்றைய போட்டியில் விளையாடினார். அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரர் தான் அணியில் விளையாடியிருக்க வேண்டும் ஆனால் நேற்றைய போட்டியில் அவர் விளையாடினார்.

- Advertisement -

Rohith

இனி வரப்போகும் பிளேஆப் போட்டியிலும் ரோஹித் விளையாட இருக்கிறார். எனவே அவர் உடல் தகுதியுடன் இருப்பதாகவே கருதுகிறேன். அவரை ஏன் அணியில் சேர்க்க வில்லை என்று பிசிசிஐக்கு நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி பிசிசிஐயின் தவறான மேலாண்மையை இந்த விடயம் சுட்டிக் காட்டுவதாகவும் சேவாக் நேரடிக் கருத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.