சூரிய குமார் யாதவ் விடயத்தில் மும்பை இந்தியன்ஸ் செய்த தவறுதான் தோல்விக்கு காரணம் – சேவாக் குற்றச்சாட்டு

sehwag
- Advertisement -

நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் வெறும் 131 ரன்கள் மட்டுமே குவித்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் 63 ரன்கள் அடித்திருந்தார். அதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 17.3 ஓவர்களில் மும்பை நிர்ணயித்த இலக்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அணியின் கேப்டன் கே எல் ராகுல் 60 ரன்கள் அடிக்க, மறுமுனையில் கிறிஸ் கெயில் 43 ரன்கள் குவிக்க பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

Rahul

- Advertisement -

நேற்றைய தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணியின் மூன்றாவது தோல்வியாக அமைந்தது. இந்நிலையில் நேற்று மும்பை அணி தோல்வி பெற்றதற்கு காரணம் இதுதான் என்று இந்திய முன்னாள் வீரர்கள் சேவாக் மற்றும் அஜய் ஜடேஜா கூறியுள்ளனர். நேற்று முதலில் மும்பை பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஓபனிங் வீரர் டி காக் 3 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன் பின்னர் மூன்றாவது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென இஷன் கிஷன் களமிறங்கினார்.

மும்பை அணிக்காக மூன்றாவது இடத்தில் எப்போதும் சூர்யகுமார் யாதவ் தான் களமிறங்குவார். நேற்றைய போட்டியில் அவர் இறங்காத காரணத்தினால் மும்பையின் ரன்கள் குறைய ஆரம்பித்தது. இஷன் கிஷன் 17 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் அடித்து அவுட் ஆனார். நிச்சயமாக சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்தில் களம் இறங்கி இருந்தால் கண்டிப்பாக மும்பை அணியால் இன்னும் 20-30 ரன்கள் கூட எடுத்து இருக்க முடியும், அதை நேற்று மும்பை அணி செய்யத் தவறியது என்று சேவாக் குற்றம் சாட்டியுள்ளார்.

சேவாக் கூறியது மிக சரி என்று கூறிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜடேஜா, நேற்று சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக மூன்றாவது இடத்தில் இறங்கி இருக்க வேண்டும். உதாரணத்திற்கு எப்பொழுதும் ஓபனிங் வீரராக களமிறங்கும் சேவாக் இடம் சென்று நீங்கள் ஓபனிங் இறங்கவேண்டாம் என்று கூறினால் எப்படி இருக்கும் அப்படித்தான் நேற்று இருந்தது என்று கூறியுள்ளார்.

Sky

மேலும் இனி வரும் போட்டிகளில் மும்பை அந்த தவறை செய்யக் கூடாது என்றும் அவ்வாறு செய்தால் நிச்சயம் நேற்றைய போட்டியை போல் தடுமாற வேண்டியிருக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement