டி20 உலககோப்பை : எந்த 2 அணிகள் பைனலுக்கு போகும்? எந்த அணி கோப்பையை வெல்லும் – சேவாக் கணிப்பு

Sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ஆம் தேதி துவங்கிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் அடுத்ததாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த சூப்பர் 12 சுற்றுக்கான போட்டிகள் இரு பிரிவுகளாக 6 அணிகள் பிரிக்கப்பட்டு அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி எது என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ICC T20 World Cup

- Advertisement -

அந்த வகையில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியானது தற்போது மிக பலம் வாய்ந்த அணியாக கட்டமைக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் இம்முறை கோப்பையை கைப்பற்றும் என்று ஒரு சிலரும், அதே போன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா தங்களது சொந்த மைதானத்திலேயே இந்த தொடரை எதிர் கொள்ள உள்ளதால் அவர்கள் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று ஒரு சிலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்த தொடரில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்? எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் வீரர்கள் யார்? சிறப்பாக விளையாடப் போகும் அணி எது? என்பது குறித்து எல்லாம் சேவாக் பேட்டி அளித்திருந்தார்.

INDvsAUS

இந்நிலையில் தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி வீழ்த்துவது மிகவும் கடினம்.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலியாவில் அவர்களது முழு பலமும் அந்த அணியின் வீரர்களால் நிச்சயம் வெளிவரும். ஆனாலும் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் அதிக போட்டிகளில் விளையாடிய நல்ல அனுபவம் கொண்ட அணி என்பதனாலும் இளம் வீரர்களைக் கொண்ட சமநிலையான அணி என்பதனாலும் கண்டிப்பாக இந்த தொடரின் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணிகளுக்கு இடையே பலத்த போட்டியில் நிலவும் என்றும் சேவாக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வரலாறு படைத்த அணி – சூப்பர் 12 சுற்றில் இந்தியாவுடன் மோதும் 5 அணிகள், முழு அட்டவணை இதோ

ஏற்கனவே பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த தொடரில் அரை இறுதிப்போட்டியில் விளையாடும் 4 அணிகள் குறித்து பேசி வந்த வேளையில் தற்போது சேவாக் இறுதிப்போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் குறித்து பேசி இருப்பது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement