வரலாறு படைத்த அணி – சூப்பர் 12 சுற்றில் இந்தியாவுடன் மோதும் 5 அணிகள், முழு அட்டவணை இதோ

SCO vs ZIM
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக உலகின் டாப் 16 அணிகள் பங்கேற்றன. அதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் கடைசி 4 அணிகளை தீர்மானிக்க அக்டோபர் 16 முதல் நடைபெற்று வந்த முதல் சுற்று இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. அதில் குரூப் ஏ பிரிவில் நமீபியா மற்றும் அமீரகம் ஆகிய அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறிய நிலையில் ஆசிய சாம்பியன் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.

அந்த நிலையில் கடைசி 2 அணிகளை தீர்மானிக்கும் 2 கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 21ஆம் தேதியன்று நடைபெற்றது. அதில் ஹோபார்ட் நகரில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த அயர்லாந்து நாக்-அவுட் செய்து சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற கடைசி போட்டியில் தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் தலா 1 வெற்றி தோல்வியை பதிவு செய்த ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.

- Advertisement -

ஜிம்பாப்வே வரலாறு:
அப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 132/2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி அதிகபட்சமாக 7 பவுண்டரியுடன் 54 (51) ரன்கள் எடுத்தாலும் ஜோன்ஸ் 4 (5) க்ராஸ் 1 (7) கேப்டன் பேரிங்டன் 13 (15) மெக்லியோட் 25 (26) லீஸ்க் 12 (9) என முக்கிய வீரர்கள் அனைவரும் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டானார்கள். அப்படி 150 ரன்களைக் கூட தொட விடாமல் சிறப்பாக பந்து வீசிய ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக சட்டாரா மற்றும் ங்கரவா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.Zimbabwe

அதை தொடர்ந்து 133 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு சகப்வா 4 (3) மாதேவர் 0 (5) சீன் வில்லியம்ஸ் 7 (12) என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் க்ரைக் எர்வின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பவுண்டரியுடன் 58 (54) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனாலும் கடைசி நேரத்தில் ரன்ரேட் எகிறியதால் கேள்விக்குறியான ஜிம்பாப்வேவை காப்பாற்றிய நம்பிக்கை நட்சத்திரம் சிகந்தர் ராசா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 40 (23) ரன்களை அதிரடியாக விளாசி வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் சும்பா 11* (11) ரன்களும் ரியன் புர்ள் 9* (5) ரன்களும் எடுத்ததால் 18.3 ஓவரில் 133/5 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த வெற்றியால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக முதல் சுற்றை கடந்து முதன்மை சுற்றுக்கு (சூப்பர் 12) தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு 40 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய சிகந்தர் ராசா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்க தவறிய ஸ்காட்லாந்து பந்து வீச்சில் முயற்சித்தும் தோல்வியடைந்ததால் இந்த உலகக் கோப்பையிலிருந்து ஆரம்பத்திலேயே வெளியேறியுள்ளது.

- Advertisement -

இதையடுத்து குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இலங்கையும் குரூப் பி பிரிவில் 2வது இடம் பிடித்த அயர்லாந்தும் சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் வகிக்கும் முதல் பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் குரூப் ஏ பிரிவில் 2வது இடத்தைப் பிடித்த நெதர்லாந்தும் குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வேவும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆகிய அணிகள் இடம் வகிக்கும் 2வது பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன் வாயிலாக சூப்பர் 12 சுற்றில் களமிறங்கும் அனைத்து எதிரணிகளும் தெரிய வந்துள்ளதால் இந்தியாவின் முழுமையான சூப்பர் 12 அட்டவணை இதோ (இந்திய நேரப்படி):
அக்டோபர் 23, மதியம் 1.30 மணி : இந்தியா V பாகிஸ்தான், மெல்போர்ன்
அக்டோபர் 27, மதியம் 12.30 மணி, இந்தியா V நெதர்லாந்து, சிட்னி
அக்டோபர் 30, மாலை 4.30 மணி, இந்தியா V தென்ஆப்பிரிக்கா, பெர்த்
நவம்பர் 2, மதியம் 1.30 மணி, இந்தியா V வங்கதேசம், அடிலெய்ட்
நவம்பர் 6, மதியம் 1.30 மணி, இந்தியா V ஜிம்பாப்வே, மெல்போர்ன்

Advertisement