இந்த டி20 வேர்ல்டுகப்ல அதிக ரன்கள் அடிக்கப்போகும் பேட்ஸ்மேன் இவர்தான் – சேவாக் கணிப்பு

Sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ஆம் தேதி துவங்கிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று தகுதிச்சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடையும் வேளையில் நாளை அக்டோபர் 22-ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன. முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கும் வேளையில் அடுத்ததாக அக்டோபர் 23-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது.

INDvsPAK

இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணியை பாகிஸ்தான அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் அந்த படுதோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அவர்களுக்கு பயம் காட்ட காத்திருக்கிறது.

இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணியாக காணப்படுவதால் நிச்சயம் இந்த போட்டியில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை துவங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போவது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தான் என்று வெளிப்படையாக தனது கருத்தினை அளித்துள்ளார்.

Babar Azam

இது குறித்து அவர் கூறுகையில் : இம்முறை இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் தான் அதிக ரன்கள் அடிப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரது பேட்டிங் தற்போது மிகச் சிறப்பான வகையில் இருக்கிறது. அவர் விளையாடும் விதத்தை பார்க்கும் போது மிகவும் சுதந்திரமாகவும், தனது ஆட்டத்தை ரசித்தும் விளையாடுகிறார்.

எனவே நிச்சயம் அவரால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக அளவிலான ரன்களை குவிக்க முடியும் என்று விரேந்திர சேவாக் கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் நீண்ட ஆண்டுகள் காத்திருந்து அண்மையில் ஆசிய கோப்பை தொடரில் மிக சிறப்பான சதத்தை விளாசியிருந்தார்.

இதையும் படிங்க : பதிவியேற்றபின் என்னோட முதல் 2 வேலை இதுதான். இதை சரி பண்ணியே ஆகனும் – ரோஜர் பின்னி அதிரடி

அதனைத்தொடர்ந்து பார்மிற்கு திரும்பிய விராட் கோலி தற்போது பயிற்சி போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் விராட் கோலியை விடுத்து பாபர் அசாமை சேவாக் தேர்வு செய்தது ரசிகர்கள் மத்தியில் சற்று விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement