பதிவியேற்றபின் என்னோட முதல் 2 வேலை இதுதான். இதை சரி பண்ணியே ஆகனும் – ரோஜர் பின்னி அதிரடி

Roger Binny Sourav Ganguly
- Advertisement -

பிசிசிஐயின் புதிய தலைவராக பதவி ஏற்றுள்ள ரோஜர் பின்னி தான் பதவியேற்றதும் செய்ய காத்திருக்கும் இரண்டு முக்கிய பணிகள் குறித்து பேசி உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி கடந்த 18-ஆம் தேதியுடன் தனது பதவியில் இருந்து வெளியேறினார். ஏற்கனவே மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த சவுரவ் கங்குலி மேலும் பதவி நீட்டிப்பு அளிக்கப்படாமல் அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Roger Binny 1

- Advertisement -

அதனை தொடர்ந்து ஐசிசி-யின் தலைவர் பதவிக்கு போட்டியிட காத்திருக்கும் கங்குலி முறைப்படி பிசிசிஐ-யின் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ-யின் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே பிசிசிஐயின் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்த ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என அனைவருமே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது புதிய பிசிசிஐ-யின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரோஜர் பின்னிக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி கூறுகையில் : ரோஜர் பின்னி மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்திய அணி தற்போது நல்ல நிலைமையில் உள்ளது. பி.சி.சி.ஐ-யும் தற்போது சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ரோஜர் பின்னியின் இந்த பதவியேற்பு இந்திய அணிக்கு நிச்சயம் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கங்குலி குறிப்பிட்டார்.

Roger-Binny

அதன் பின்னர் புதிய பொறுப்பினை ஏற்ற ரோஜர் பின்னி : இந்த பதவியில் தான் செய்ய காத்திருக்கும் முதல் இரண்டு பணிகள் குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பிசிசிஐயின் தலைவராக நான் வீரர்களின் பிட்னஸ் மற்றும் இந்தியா முழுவதும் இருக்கும் மைதானங்களில் குவாலிட்டி ஆகியவற்றை முன்னேற்ற விரும்புகிறேன்.

- Advertisement -

ஏனெனில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்ற பும்ரா காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியது ஒட்டுமொத்த இந்திய அணியின் திட்டத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே இனி வீரர்கள் இப்படி காயத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பிட்னஸில் அதிக அளவு கவனம் செலுத்தப்படும்.

இதையும் படிங்க : விராட் கோலி மாதிரி திறமையான அவர்தான் இந்த டி20 உ.கோ’யில் அதிக ரன்கள் எடுப்பாரு – சேவாக் அதிரடி கணிப்பு

அதேபோன்று இந்தியா முழுவதும் இருக்கும் மைதானங்களின் தன்மை கணிக்கப்பட்டு மைதானங்களில் தரம் உயர்த்தப்படும். அப்படி மைதாங்களின் தரம் உயர்த்தப்பட்டால் நிச்சயம் இந்திய மைதானங்களில் நடக்கும் போட்டிகள் அனைவரது மத்தியிலும் கவனத்தை பெறும் என ரோஜர் பின்னி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement