டி20 இவர் சரிப்பட்டு வரமாட்டாருன்னு நெனைக்கிறீங்க. ஆனால் இவர் வேறலெவல் பிளேயர் – சேவாக் புகழாரம்

sehwag

அஜின்கியா ரஹானே இந்திய அணிக்காக 2012ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். தற்போது வரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4200 ரன்களும், 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 3000 ரன்களும், இருபது டி20 போட்டிகளில் விளையாடி 375 ரன்களும் எடுத்து இருக்கிறார். அதுபோக ராஜஸ்தான் மற்றும் டெல்லி போன்ற ஐபிஎல் அணிகள் விளையாடி இருக்கிறார்.

rahane

தற்போது ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 4000 அடித்துவிட்டார். பொதுவாக ரகானே டி20 போட்டிகளில் லாயக்கில்லாத வீரர் என்று கூறப்படுவதுண்டு. 2015 ஆம் ஆண்டு அப்போது கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி கூட ரகானே பெரிய ஷாட் ஆட மாட்டார் அதன் காரணமாக உலக கோப்பை தொடரில் அவரை எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரகானே டெல்லி அணி நன்றாக விளையாட உத்வேகமாக இருந்தார். 46 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தார்.

dhawan

ரஹானே உடைய இந்த இன்னிங்ஸ் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் கூறியதாவது : ரஹானேவை டி20 வீரராக பலர் ஏற்றுக்கொள்வதில்லை. பவுண்டரிகள் அடிக்க தவருகிறார் என்றும் பலர் கூறி வருகின்றனர். ஆனால் ரகானே போன்ற ஒரு பேட்ஸ்மேன் களத்தில் நிலைத்து நின்று நங்கூரமாக ஆடக் கூடியவர். அவர் ஆடும் போது எதிர் திசையில் உள்ள வீரர் அடித்து ஆட வேண்டும் அப்போதுதான் அவருக்கு பக்கபலமாக இருக்கும்.

- Advertisement -

Rahane

ரகானே தொடர்ந்து சொதப்பலாக ஆடிக் கொண்டிருந்த போதும் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வாய்ப்பு கொடுத்து கொண்டே இருந்தால் அதனை சரியாக பயன்படுத்தி விட்டால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணி நேற்று வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது என்று கூறியுள்ளார் விரேந்தர் சேவாக்.