- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இவரோட ஷாட் செலக்ஷன் ரொம்ப நல்லா இருக்கு. பெரிய ரன்களை இவர் குவிப்பார் – சேவாக் புகழாரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நான்கு நாள் ஆட்ட முடிவடைந்த நிலையில் ஐந்தாவது நாள் இந்திய அணிக்கு எளிதான வெற்றி வாய்ப்பு இருந்தது இருப்பினும் 5ஆம் நாள் பெய்த மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பியது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் முதல் இன்னிங்சில் 84 ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னிலைக்கு உதவினார்.

இந்த தொடரின் துவக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட கில் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ராகுல் தனது முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ராகுலின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு விதமான மனநிலையுடன் விளையாடவேண்டும். ஒன்று டிராவிட் போன்று நிதானமாக தடுப்பாட்டத்தில் விளையாடுவது அல்லது என்னை போன்று அதிரடியாக விளையாடுவது. ஆனால் இது இரண்டுமே ஒரு பேட்ஸ்மேனாக மிகவும் கடினம் தான். ஒரு பேட்ஸ்மேனாக உங்களுக்கு எது சிறப்பான தேர்வாக அமைகிறதோ அதன்படியே நீங்கள் விளையாடலாம். ராகுல் இப்போது விளையாடி வரும் விதம் சிறப்பாக உள்ளது.

இதில் மிகவும் முக்கியமான விடயம் யாதெனில் அவருடைய ஷாட் செலக்சன் தான். தேவையான பந்துகளுக்கு அவர் மரியாதை கொடுத்து விட்டு விடுகிறார். அதேபோன்று சற்று சுமாரான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுகிறார். இந்த குணம் நிச்சயம் அவரை பெரிய இன்னிங்சிற்கு கொண்டு செல்லும். போட்டியின் ஆரம்பத்தில் அவர் சில ஷாட்டுகளை விளையாட விருப்பப்படுகிறார்.

- Advertisement -

அதுவும் சரியான பந்துகளை தேர்வு செய்து சரியான ஷாட் விளையாடுகிறார். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் பந்து சற்று மேலே வந்து வந்தால் ராகுல் அடிக்க செல்கிறார். அதேபோன்று நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுத்து விட்டு விடுகிறார். இவருடைய இந்த பாணி நிச்சயம் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வைக்கும்.

பல ஆண்டுகளாக உங்களைப் பார்த்து வரும் பயிற்சியாளர்கள், நண்பர்கள் என யாராவது உங்கள் பேட்டிங்கில் உள்ள குறையை சொன்னால் அதனை எடுத்துக்கொண்டு அதில் உள்ள குறையை நீக்கி நல்ல வீரராக மாற வேண்டும். அந்த வகையில் தற்போது ராகுல் தனது பேட்டியில் உள்ள சிறிய சிறிய தவறுகளை திருத்திக் கொண்டு பலமாக திரும்பியுள்ளார். நிச்சயம் அவரால் மிகப்பெரிய இன்னிங்சை விளையாட முடியும் என விரேந்திர சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by