கேப்டன் பொறுப்பில் மூழ்கி ரோஹித் சர்மா இந்த விஷயத்தை மறந்துட்டாரு – ரோஹித்தை விளாசிய சேவாக்

Rohit Sharma Rishabh Pant
- Advertisement -

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதிலும் அந்த அணியை போலவே தனது முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்றுவரை 10-வது இடத்தில் மும்பைக்கு தோழனாக இருந்தது. ஆனால் நேற்றைய பெங்களூருக்கு எதிரான தனது 5-வது போட்டியில் அதிரடியாக செயல்பட்ட அந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்து தற்போது மும்பையை 10-வது இடத்திற்கு தள்ளி 9-வது இடத்தைப் பிடித்து நிம்மதி பெருமூச்சு விட்டடுள்ளது.

Mumbai Indians MI

எனவே சென்னையைப் போலவே இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி பஞ்சாப் எதிராக நடைபெறும் தனது 5-வது போட்டியில் மும்பை மீண்டெழுந்து முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பிய மும்பை இன்றைய போட்டியில் கண்டிப்பாக வென்றே தீரவேண்டும் என்ற நிலையில் களமிறங்குகிறது.

- Advertisement -

தவிக்கும் ரோஹித்:
அந்த அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா தவிர வேறு நல்ல பவுலர் இல்லாத காரணத்தால் அதை சிறப்பான பேட்டிங்கை வைத்து சரி செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் பேட்டிங்கில் இஷான் கிசான், சூர்யகுமார் யாதவ் ஆகியோரைத் தவிர வேறு யாரும் இதுவரை பெரிய அளவில் ரன்கள் குவிக்காத காரணத்தாலேயே அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக அந்த அணிக்கு 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயர் எடுத்துள்ள ரோகித் சர்மாவின் பேட்டிலிருந்து ரன்கள் வர மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

RCB vs MI Rohit Sharma

இது மட்டுமல்லாமல் கடந்த 3 – 4 வருடங்களாகவே வெறும் 30க்கும் கீழான பேட்டிங் சராசரியில் ரன்களை குவித்து வரும் அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் அவர் 5 கோப்பைகளை வென்று கொடுத்த காரணத்தால் அவரின் பேட்டிங் பற்றி யாருமே கேள்வி எழுப்புவதில்லை.

- Advertisement -

பேட்டிங் மறந்துட்டாரு:
இந்நிலையில் சமீப காலங்களாக சிறப்பான கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தன்னை ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதை மறந்து விட்டதாக முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று சென்னை வெற்றி பெற்ற பின் அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை செய்தது போலவே மும்பையும் டாஸ் தோற்கும் பட்சத்தில் அந்த எக்ஸ்ட்ரா ரன்களை குவிக்க வேண்டும். அந்த அணியிடம் இருக்கும் தற்போதைய பந்து வீச்சை வைத்துக் கொண்டு 160 – 170 போன்ற ரன்களை அடித்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. பும்ராவும் எவ்வளவுதான் தனியாளாக போராட முடியும்”

Sehwag

“முதலில் களத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ரோகித் சர்மா தன்னை ஒரு கேப்டன் என்பதை மறந்துவிட்டு தாம் ஒரு ஹிட்மேன் என்பதற்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும். சென்னையைப் போல அவர்கள் முதலில் விக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு கடைசி 10 ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டும். ஆரம்பத்தில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும். அதேபோல் பேசாமல் இருக்கும் பொல்லார்ட்டின் பேட் பேசினால் அந்த எக்ஸ்ட்ரா 12 – 20 ரன்கள் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல இது போன்ற தருணங்களில் மும்பை போன்ற ஒரு சாம்பியன் அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டுமெனில் அதன் கேப்டன் மிகச் சிறப்பாக ரன்களை குவித்து முன்னின்று அணியை வழிநடத்த வேண்டும். அப்போதுதான் அணியில் இருக்கும் இதர வீரர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும். அதை செய்வதற்கு ரோகித் சர்மா முதலில் தாம் ஒரு கேப்டன் என்பதை மறந்துவிட்டு எதிரணி பவுலர்களை புரட்டி எடுக்கும் ஹிட்மேன் என்ற நினைப்பில் விளையாட வேண்டும் என சேவாக் கேட்டுக்கொண்டுள்ளார்.

rohith

அதுபோன்ற நினைப்பில் விளையாடினால் மட்டுமே தற்போது நிலவும் மோசமான பந்து வீச்சை மூடிமறைத்து சூர்யகுமார் யாதவ் போன்ற பேட்டிங்கில் தனி ஒருவனாக போராடும் வீரர்களுக்கு உதவி செய்து மும்பையை வெற்றி பெற வைக்க முடியும் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “களத்தில் இருக்கும் வரை அதிரடியாக விளையாடக் கூடிய சூர்யகுமார் யாதவ் எதிரணிகளை பந்தாடுகிறார்.

இதையும் படிங்க : சொன்ன வாக்கை காப்பாற்றி வரும் தினேஷ் கார்த்திக். டி20 உலகக்கோப்பை அணியில் – இடம் கிடைக்குமா?

ஆனால் அவர்களது அணியில் குறைந்தது 3 பேட்ஸ்மேன்கள் கடைசி வரை சிறப்பாக விளையாட வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை எனில் ஒரு பேட்ஸ்மென் மட்டும் டைல் எண்டர்களுடன் விளையாடும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட தருணத்தில் அவர்  சிக்சர் அடிக்கலாமா அல்லது சிங்கிள் எடுக்கலாமா என்ற குழப்பத்திலேயே தடுமாறுவார்” என்று கூறினார்.

Advertisement