சொன்ன வாக்கை காப்பாற்றி வரும் தினேஷ் கார்த்திக். டி20 உலகக்கோப்பை அணியில் – இடம் கிடைக்குமா?

karthik
- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த சில சீசன்களாகவே கொல்கத்தா அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வந்த தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அதோடு அவரது பேட்டிங் ஃபார்மும் முன்பு போன்று பிரமாதமாக இல்லை என்கிற காரணத்தினால் அவர் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மெகா ஏலத்தின்போது பெங்களூர் அணிக்காக தேர்வான தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெஸ்ட் பினிஷர் என்பதை நிரூபித்துள்ளார்.

Karthik-2

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் என்னுடைய அற்புதமான ஆட்டம் இந்த தொடரில் வெளிப்படும் என்றும் அதன் பிறகு தான் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் விளையாடுவேன் என்று சபதம் செய்திருந்தார். அவர் கூறியது போலவே தற்போது இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அவர் ரன் வேட்டையை வழங்கிவருகிறார். குறிப்பாக பெங்களூரு அணி தடுமாறி வந்த பினிஷிங் ரோலில் களம் இறங்கி விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் பின்வரிசையில் தனது அற்புதமான பினிஷிங் ஸ்கில்களை வெளிக்காட்டி தொடர்ச்சியாக பெங்களூர் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து வருகிறார்.

அதோடு நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கூட 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தும் போது கடைசி மூன்று ஓவர்களுக்கு 50 ரன் தேவைப்பட்டது ஆனாலும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்ததால் அப்போதும்கூட போட்டி உயிர்ப்புடன் இருந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு தினேஷ் கார்த்திக் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Dinesh Karthik 2

நேற்றைய போட்டியில் 14 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பந்து மட்டும் சிக்சருக்கு சென்று இருந்தால் நிச்சயம் போட்டியை முடித்து கொடுத்திருக்க கூட அவரால் முடிந்து இருக்கும் என்று ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கை மனதார பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி அவர் பினிஷிங் ரோலில் களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு இந்திய அணியில் விளையாட இடம் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குவித்து வருகிறது. ஏற்கனவே தினேஷ் கார்த்திக்கும் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் அதுவே எனது விருப்பம் என்றும் வெளிப்படையாக கூறியிருந்தார். அதன்படி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்து வரும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதையும் படிங்க : தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரராக சி.எஸ்.கே அணியில் இணையப்போவது இவர்தானாம் – வெளியான தகவல்

ஏற்கனவே இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருவதால் தினேஷ் கார்த்திக்கை எந்த கோணத்தில் பிசிசிஐ அணுக போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement