தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரராக சி.எஸ்.கே அணியில் இணையப்போவது இவர்தானாம் – வெளியான தகவல்

Deepak
- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றி நடப்பு சாம்பியனாக திகழ்ந்து வரும் சென்னை அணியானது தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணியானது படுமோசமான நிலையில் இருந்து தற்போது பெங்களூரு அணிக்கு எதிராக ஒரு வெற்றியைப் பெற்று சற்று ஆறுதல் தந்துள்ளது. எனினும் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சிஎஸ்கே அணி அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

deepak

- Advertisement -

இந்த தொடரில் சிஎஸ்கே அணி முதல் நான்கு போட்டிகளில் தோல்வி அடைய மோசமான பந்து வீச்சுதான் காரணமாக அமைந்தது. இந்த தொடரில் சி.எஸ்.கே அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் காயம் காரணமாக இடம்பெறாமல் போனது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஏனெனில் நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கும் திறன் கொண்டவர். அவர் காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்து வந்ததால் ஏப்ரல் இறுதியில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு மேலும் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக நேற்று தகவல்கள் வெளியானது.

ishanth 2

அவரது இந்த விலகல் பெரிய பின்னடைவை தந்துள்ளது. ஏனெனில் பவர் பிளே ஓவர்களிலேயே அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்ட இவர் இல்லாமல் தற்போது சென்னை அணி துவக்க ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து அவர் வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் மாற்று வீரராக எந்த வீரரை சிஎஸ்கே அணி தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பே அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது தீபக் சாஹருக்கு மாற்று வீரராக இந்திய அணியின் சீனியர் வீரரான இஷாந்த் சர்மாவை மாற்று வீரராக சென்னை நிர்வாகம் தேர்வு செய்து வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கொல்கத்தா அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஸ்பெஷலிஸ்ட் உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : கேப்டனாக என்னுடைய இந்த முதல் வெற்றியை நான் டெடிகேட் பண்ண விரும்புவது அவங்களுக்கு தான் – ஜடேஜா மகிழ்ச்சி

அதேபோன்று நிச்சயம் சீனியர் வீரரான இஷாந்த் சர்மாவாலும் மிகவும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதன் காரணமாக அவரை தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியவரும்.

Advertisement