கேப்டனாக என்னுடைய இந்த முதல் வெற்றியை நான் டெடிகேட் பண்ண விரும்புவது அவங்களுக்கு தான் – ஜடேஜா மகிழ்ச்சி

Jadeja-1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணியானது நேற்று ஒரு வழியாக பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்களது மோசமான செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி நேற்று டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியானது முதல் 10 ஓவர்களில் 60 ரன்களை மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அடுத்த 10 ஓவர்களில் 156 ரன்கள் குவித்து 20 ஓவர்களின் முடிவில் 216 ரன்களை குவித்தது.

Shivam Dube Robin Uthappa

- Advertisement -

சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் ராபின் உத்தப்பா 88 ரன்களையும், ஷிவம் துபே 95 ரன்களையும் அடித்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி 193 ரன்கள் மட்டுமே குவித்ததால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி பெங்களூரு அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.

தொடர்ச்சியாக அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்த சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா தான் பெற்ற இன்று முதல் வெற்றி குறித்து போட்டி முடிந்தவுடன் மகிழ்ச்சியுடன் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கேப்டனாக தற்போதுதான் முதல் வெற்றியை பெற்றுள்ளேன். இந்த வெற்றியை என்னுடைய மனைவிக்கும் எனது அணிக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.

CSK vs RCB 2

ஏனெனில் முதல் வெற்றி என்பது எப்போதுமே ஒரு ஸ்பெஷலான நிகழ்வு. அந்த வகையில் கடந்த நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்த நாங்கள் இம்முறை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். உத்தப்பா மற்றும் துபே ஆகியோர் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோன்று பந்துவீச்சிலும் எங்களது செயல்பாடு அருமையாக இருந்தது.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி பெற முடிந்தது. ஒரு கேப்டனாக நான் ஒவ்வொரு போட்டியிலும் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன். தோனி என்னுடன் இருக்கிறார் எந்தவித ஆலோசனையாக இருந்தாலும் அவரிடம் நான் கலந்துரையாடுகிறேன்.

இதையும் படிங்க : ஒரே போட்டியில் 5 முக்கிய மாஸான சாதனைகளை நிகழ்த்திய உத்தப்பா, ஷிவம் துபே ஜோடி – லிஸ்ட் இதோ

கேப்டன் பொறுப்பு என்பது எனக்கு ஒரு புதிய பதவி. நிச்சயம் இதனை சிறப்பாக கொண்டு செல்வேன் என்றும் இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று பாசிட்டிவாக விளையாடி வெற்றி பெறுவோம் எனவும் ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement