இந்த ஐ.பி.எல் தொடரின் சிறந்த கேப்டன் யார்? என்னை பொறுத்தவரை இவர்தான் – சேவாக் வெளிப்படை

Sehwag
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய 15-ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் வாரம் 29-ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்கிற வேளையில் இந்த ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளாக குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

IPL 2022 (2)

- Advertisement -

இந்த ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியாக இன்று முதல் தகுதி சுற்று போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. பின்னர் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. குவாலிபயர் 1 போட்டியில் தோல்வி அடையும் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்ற பெற்ற அணியும் குவாலிபயர் 2 போட்டியில் மோதும்.

பின்னர் இறுதியாக இறுதிப்போட்டி 29 ஆம் தேதி மோதிரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே இருந்த எட்டு அணிகளுடன் புதிதாக இணைந்த குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் சீனிலேயே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் இந்தத் தொடரில் தன்னை கவர்ந்த சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Hardik Pandya GT Vs RR 2.jpeg

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை இந்த சீசனின் சிறந்த கேப்டன் மற்றும் என்னை கவர்ந்த கேப்டன் யார் என்று கேட்டால் அது ஹார்டிக் பாண்டியா தான். அவர் இவ்வளவு பிரமாதமாக கேப்டன்சி செய்வார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் பேட்டிங் செய்யும் விதத்திலும் சரி, கேப்டன்சி செய்யும் விதத்திலும் சரி ஆக்ரோஷமாக இருப்பார் என்று தான் நினைத்தேன்.

- Advertisement -

ஆனால் இந்த தொடர் முழுவதுமே முக்கிய நேரங்களில் மிகவும் அமைதியாக கூலாக கேப்டன்சி செய்து வருகிறார். பல போட்டிகளில் குஜராத் அணி வெற்றி பெற்றதற்காகவோ அல்லது அந்த அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா எனது நண்பர் என்பதற்காகவோ நான் இதை சொல்லவில்லை. ஒருவரின் கேப்டன்சியை நீங்கள் எப்போது ரசிப்பீர்கள்?

இதையும் படிங்க : ஜஹீர் கான், நெஹ்ரா மாதிரி இவரும் வருவாரு – இந்தியாவுக்கு தேர்வான இளம் பவுலரை பாராட்டும் சேவாக்

கேப்டன் என்பவர் போட்டியின் கடினமான இக்கட்டான சூழ்நிலைகளில் அவர் எடுக்கும் முடிவை வைத்துதான் சிறந்த கேப்டனா என்பது குறித்து சொல்ல முடியும். அந்த வகையில் அதை பொருத்துதான் நான் சொல்கிறேன் பாண்டியா இம்முறை இந்த ஐபிஎல் தொடரில் நெருக்கடியான சூழ்நிலையிலும் அமைதி காத்து சிறப்பான கேப்டன்சி செய்துள்ளார் என்று சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement