சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நிச்சயம் இதை சாதிக்கும் – விரேந்தர் சேவாக் உறுதி

Sehwag and IND
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையையும் ஏற்கனவே முறைப்படி வெளியிடப்பட்டு விட்டன.

ஆசிய கோப்பையில் இந்திய அணி வெற்றிபெறும் : வீரேந்தர் சேவாக் உறுதி

இந்த தொடரில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா நான்கு அணிகள் இடம் பெற்று விளையாட இருக்கின்றன. அதன் பின்னர் சூப்பர் ஃபோர் சுற்று, அரையிறுதி போட்டி, இறுதிப்போட்டி என அடுத்த ஒரு மாதம் இந்த தொடரானது விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியானது கடந்த வாரம் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆசிய கோப்பையை கைப்பற்றக்கூடிய தகுதியான ஒரு அணிதான் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி ஒரு சாம்பியன் அணி. ஏற்கனவே டி20 உலக கோப்பை கைப்பற்றிய நாம் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றியுள்ளோம். அதோடு நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடரையும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

- Advertisement -

ஏனெனில் தற்போதைய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய டி20 அணி மிகச் சிறந்த அணியாக இருக்கிறது. அதோடு அந்த அணியின் கேப்டனாக டி20 ஃபார்மெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் வழி நடத்துகிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகிறது.

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயர் அசத்தியும் சுப்மன் கில் டி20 துணை கேப்டனாக வர கம்பீர் தான் காரணம் – மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

எனவே இந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி தங்களது வெற்றியை தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியானது இந்த ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதலாவது போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடயிருக்கிறது.

Advertisement