ஷ்ரேயாஸ் ஐயர் அசத்தியும் சுப்மன் கில் டி20 துணை கேப்டனாக வர கம்பீர் தான் காரணம் – மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

Shreyas and Gill
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு அவர்கள் இருவர் உட்பட 15 பேர் கொண்ட அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு விமர்சனங்கள் அணித்தேர்வின் மீது இருந்து வருகின்றன.

கம்பீருக்கு ஷ்ரேயாஸ் ஐயரை பிடிக்கல : மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

ஏனெனில் சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்ற சுப்மன் கில் கடந்த ஓர் ஆண்டாக டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த வேளையில் தற்போது மீண்டும் ஆசிய கோப்பை தொடருக்கான அணிக்கு திரும்பியதோடு மட்டுமின்றி அவர் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த நிரந்தர கேப்டனாக சுப்மன் கில் மாற இருப்பதை நிர்வாகம் மறைமுகமாக வெளிக்காட்டி இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இப்படி ஒரு வீரருக்கு திடீரென துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது பல்வேறு தரப்பினரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான மனோஜ் திவாரி கூறுகையில் : என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவிற்கு அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட தகுதியானவர்.

ஏனெனில் ஐபிஎல் தொடரின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றிகரமாக இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற அவர் உள்ளூர் போட்டிகளிலும் மும்பை அணிக்காக அடுத்தடுத்த கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஒரு கேப்டனாக கடந்த சில ஆண்டுகளாகவே அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டு முன்னிலையில் இருக்கிறார். ஆனால் அவரை தாண்டி தற்போது சுப்மன் கில் இந்திய டி20 அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதற்கு முற்றிலும் காரணம் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் என்று நினைக்கிறேன். கௌதம் கம்பீருக்கு ஷ்ரேயாஸ் ஐயரை காட்டிலும் சுப்மன் கில்லை கம்பீருக்கு மிகவும் பிடித்திருக்கிறது அதனால் தான் அவருக்கு துணை கேப்டன் பதவியை வழங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க : கே.எல் ராகுல் வருகை காரணமாக கேள்விக்குறியாகும் ரஹானேவின் இடம் – கே.கே.ஆர் அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

2024 ஆம் ஆண்டு கே.கே.ஆர் அணி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கோப்பையை வென்றிருந்தும் அவரை புறக்கணித்துவிட்டு சுப்மன் கில்லை கம்பீர் தேர்வு செய்துள்ளார். இதன் மூலம் அவருக்குப் பிடித்த வீரர்களே அணியில் இடம் பிடிப்பதோடு மட்டுமின்றி பதவியையும் பெறுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. கம்பீர்தான் இதற்கெல்லாம் முழுக்க முழுக்க காரணம் என மனோஜ் திவாரி சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement