கே.எல் ராகுல் வருகை காரணமாக கேள்விக்குறியாகும் ரஹானேவின் இடம் – கே.கே.ஆர் அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

Rahane and Rahul
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 7 தோல்விகளுடன் எட்டாவது இடத்தை பிடித்து வெளியேறியது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியிருந்த வேளையில் இந்த ஆண்டு இப்படி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

கே.கே.ஆர் அணியில் ஏற்படவுள்ள மாற்றம் :

அதோடு சாம்பியன் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்த கொல்கத்தா அணியானது தங்களது புதிய கேப்டனாக ரகானேவை நியமித்து இந்த 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்றது. ஆனால் எதிர்பார்த்தபடி கொல்கத்தா அணியால் இந்த தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை.

- Advertisement -

அதன் காரணமாக அடுத்த 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி கொல்கத்தா அணியிலிருந்து ரகானேவை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வரும் கே.எல் ராகுலை தங்களது அணிக்கு கொண்டு வந்து அவருக்கு கேப்டன் பதவியும் வழங்க கொல்கத்தா அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு லக்னோ அணியில் இருந்து வெளியேறிய அவர் கொல்கத்தா அணிக்கு சென்ற வேளையில் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அதேபோன்று தேவையான நேரத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் பட்டேலுக்கும் தனது ஆலோசனைகளின் மூலம் உதவியிருந்தார்.

- Advertisement -

இப்படி அனைத்து விதமான திறமையும் கொண்ட அவரை பெரிய தொகை கொடுத்து கொல்கத்தா அணி டிரேடிங் முறையில் தங்களது அணி கொண்டு வந்து கேப்டன் பதவியையும் வழங்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சி.எஸ்.கே அணி கே.எல் ராகுல் மீது ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங் 100 டெஸ்ட் ஆடியிருக்கனும்.. ஆனா அவரோட டெஸ்ட் கரியர் சரிய இதுதான் காரணம் – முன்னாள் வீரர் கருத்து

இவ்வேளையில் கே.கே.ஆர் அணி அவருக்கு கேப்டன் பதவியையும் வழங்கி டிரேடிங் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது அஜின்க்யா ரஹானே கொல்கத்தா அணியிலிருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படி கே.எல் ராகுல் வருகையால் ரஹானேவின் இடம் பாதிப்பை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement