இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் கடந்த 2000-ஆவது ஆண்டில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளில் விளையாடியது மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் 2008-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை 132 போட்டிகளில் விளையாடியுள்ளார். பல ஆண்டுகளாக நட்சத்திர ஆல்ரவுண்டராக திகழ்ந்து வந்த அவர் பல்வேறு சரித்திர வெற்றிகளுக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் யுவ்ராஜ் சிங் திறன் முழுவதும் வெளிப்படவில்லை : சரண்தீப் சிங்
அதிலும் குறிப்பாக 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வெற்றிபெற்ற போதும் யுவ்ராஜ் சிங் அணியில் இருந்துள்ளார். அதுமட்டும் இன்றி 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பைகளின் போது தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.
அதிரடியான பேட்டிங்கில் கலக்கும் அவர் பந்துவீச்சில் அசத்தும் வீரராகவும் இருந்ததால் நட்சத்திர ஆல்ரவுண்டராக இந்திய அணிக்கு பல ஆண்டுகள் விளையாடியிருந்தார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவர் வெறும் 40 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். அதனால் டெஸ்ட் போட்டிகளில் அவருடைய திறன் முழுமையாக வெளிப்படவில்லை என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் சில கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு நிர்வாகியுமான சரண்தீப் சிங் கூறுகையில் : யுவராஜ் சிங்கிடம் இருந்த திறமைக்கு 100 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடிருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் டெஸ்ட் போட்டிகளில் பெரிய சரிவை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து சில கருத்துக்களை சரண்தீப் சிங் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை யுவராஜ் சிங் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டிய திறமைசாலி. ஆனால் இந்திய அணியில் அவரால் 40 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. அதற்கு காரணம் : சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமணன் போன்ற ஜாம்பவான் வீரர்கள் மிடில் ஆர்டரில் நிறைந்திருந்தனர்.
இதையும் படிங்க : அவங்கள எப்படி ட்ரீட் பண்ணனும்னு விராட் கோலி தான் கத்து குடுத்தார்.. அதன் அக்ரெஷனுக்கு காரணம் – சிராஜ் பகிர்வு
அதன் காரணமாக அந்த காலகட்டத்தில் யுவராஜ் சிங் தொடர்ச்சியாக டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பது சவாலாக இருந்தது. அதனாலே அவரது டெஸ்ட் கரியர் சரிவை சந்தித்தது. டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை அவருடைய முழு திறன் வெளிவராமல் மறைந்து விட்டது என சரண்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



