6 க்கு 6 வெற்றி, தல தோனியின் மேஜிக்கால் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை செல்வது உறுதி ! ஜாம்பவான் நம்பிக்கை

MS Dhoni vs MI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் ஒரு மாதத்தை கடந்து பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது. இந்த தொடர் துவங்குவதற்கு ஒருசில நாட்கள் முன்பாக நடப்பு சாம்பியனாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயரெடுத்த எம்எஸ் தோனி திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியது மிகப்பெரிய எதிர்பாராத முடிவாக அமைந்தது. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் 12 சீசன்களில் வழிநடத்திய அவர் ஏராளமான வெற்றிகளை குவித்து போட்டிகள் அடிப்படையில் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற பெயரெடுத்த போதிலும் 40 வயதை கடந்த காரணத்தால் வருங்காலத்தை கருதி கேப்டன்சிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவர் தலைமை சாதாரண வீரராக முதல் முறையாக விளையாடினார்.

Ravindra Jaddeja MS Dhoni

- Advertisement -

மறுபுறம் உள்ளூர் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ரவீந்திர ஜடேஜாவுக்கு அவர் உதவியாக இருந்த போதிலும் முதல் 4 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்த சென்னை கடைசி இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தனத்துக்குத்தானே குறைத்துக் கொண்டது. அதன்பின் பெங்களூருவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த போதிலும் மீண்டும் தோல்வி அடைந்த அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் தவிக்கிறது.

மீண்டும் தோனி கேப்டன்:
அதைவிட கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இலங்கை தொடரில் கூட அற்புத ஆல்-ரவுண்டராக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா அனுபவமில்லாத கேப்டன் பொறுப்பேற்ற பின் அந்த அழுத்தம் அவரின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிய அளவில் பாதித்தது. அதிலும் உலகின் நம்பர்-1 பீல்டராக கருதப்படும் அவர் மும்பைக்கு எதிரான ஒரு போட்டியில் கைகால் நடுங்கியது போல் 2 எளிதான கேட்ச்களை கோட்டை விட்டதால் வெற்றி பறிபோனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. மொத்தத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பு நமக்கு செட்டாகாது என உணர்ந்த அவர் மீண்டும் அந்தப் பொறுப்பை எம்எஸ் தோனியிடமே வழங்கியுள்ளார்.

MS Dhoni Jadeja

விரைவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளதால் அதற்கு முன்பு பார்முக்கு திரும்பும் வகையிலும் சென்னையின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் அவர் எடுத்த இந்த தைரியமான முடிவு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இருப்பினும் ஏற்கனவே 8 போட்டிகளில் 6 தோல்வியை பதிவு செய்த சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது 90% சாத்தியமற்றதாக மாறியுள்ளதால் இந்த முடிவு மிகவும் லேட் என்று நிறைய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

மேஜிக் நிகழும்:
எது எப்படி இருந்தாலும் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல அடுத்த 6 போட்டிகளில் தொடர் வெற்றிகள் தேவைப்படுவதுடன் நல்ல ரன்ரேட் மற்றும் அதீதமான அதிர்ஷ்டமும் சென்னைக்கு தேவைப்படுகிறது. அதன் காரணமாக தோனி கேப்டனாக செயல்பட்டாலும் கூட அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான சாத்தியமில்லை என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கண்டிப்பாக எம்எஸ் தோனி சாட்டையை சுழற்றி மேஜிக் நிகழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்வார் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Sehwag

இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் அவருடன் (தோனி) 2005 முதல் இருந்து வருகிறேன். அவர் தலைமையில் இந்திய கிரிக்கெட் நிறைய மாற்றங்களை கண்டது. அதுவரை வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்த போட்டிகளில் கூட தோற்று வந்த நாங்கள் அவர் தலைமையில் தோற்று விடுவோம் என்ற நிலைமையில் இருந்த போட்டிகளை கூட வென்றோம். குறிப்பாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முத்தரப்பு தொடரின் 2 இறுதிப் போட்டிகளிலும் தோற்கடிப்போம் என்று நாங்கள் நினைக்கவில்லை”

- Advertisement -

“ஆனால் 2008இல் குறிப்பாக டெஸ்ட் தொடரில் தோற்றதற்குப் பின் அந்த முத்தரப்பு தொடரை (காமன்வெல்த் பேங்க் தொடர்) வென்றோம். அதேபோல் அதுவரை தோற்று வந்த நாங்கள் அதன்பின் நிறைய ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களிலும் வெற்றிபெற தொடங்கினோம். எனவே அதை மனதில் வைத்துள்ள நான் இது (சென்னை தொடர்ந்து 6 போட்டிகளில் வெல்வது) கண்டிப்பாக நடைபெறும் என நம்புகிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க : ராஜஸ்தானின் புதிய சூப்பர் ஸ்டாராக ஜோஸ் பட்லர் ! 10 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை – என்ன தெரியுமா

அதாவது கங்குலி போன்ற மகத்தான கேப்டன்ஷிப் தலைமையில் கூட நிறைய வெற்றி பெற வேண்டிய போட்டிகளை தோற்று வந்த இந்தியா தோனி வந்த பின் தோற்க இருந்த நிறைய போட்டிகளில் கூட நிறைய வெற்றிகளை பெற்றதாக அவர் தலைமையில் விளையாடிய சேவாக் மனம் திறந்துள்ளார். எனவே இதற்கு முன் இந்தியாவிற்காகவும் சென்னைக்காகவும் இது போன்ற தருணங்களில் சாதித்து காட்டியுள்ள எம்எஸ் தோனி இந்த முறையும் 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்வார் என்று உறுதியாக நம்புவதாக சேவாக் கூறுவது சென்னை ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement