கேப்டன்ஷிப் அழுத்தம் சகஜம் தான். வெளிவர இதை செய்யுங்கள் போதும் – ஜடேஜாவுக்கு ஜாம்பவானின் ஆலோசனை

Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி ரசிகர்களுக்கு மட்டும் கவலையாக நடைபெற்று வருகிறது. ஏனெனில் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடி வரும் அந்த அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தை பிடித்து திண்டாடி கொண்டிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள சென்னை பொதுவாகவே பிளே-ஆப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெறும் ஒரு அணியாக கருதப்பட்டு வருகிறது.

CSK-1

- Advertisement -

ஆனால் இந்த வருடம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மோசமாக செயல்பட்டு வரும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. தற்போதைய நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றால் மட்டுமே அந்த அணியால் நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

தவிக்கும் ஜடேஜா:
முன்னதாக இந்த தொடர் துவங்குவதற்கு ஒருசில நாட்கள் முன்பாக சென்னையின் கேப்டனாக 2008 முதல் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு 4 கோப்பைகளை வென்று கொடுத்த நட்சத்திரம் எம்எஸ் தோனி திடீரென பதவி விலகினார். கடந்த பல வருடங்களாக தனது அபார கேப்டன்ஷிப் திறமையால் பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் 40 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தலைமை பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டு அவர் தலைமையில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். மறுபுறம் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக சென்னை போன்ற ஒரு மிகப்பெரிய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார்.

MS Dhoni Jadeja

அவருக்கு உறுதுணையாக எம்எஸ் தோனி இருந்தாலும் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாத அவர் முதல் வெற்றிக்கு முன்பாகவே கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தவித்து வருகிறார். ஏனெனில் கடந்த வருடம் வரை அவர் சுதந்திரப் பறவையாக அபாரமாக செயல்பட்டு வந்தார். அதிலும் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடிய நிலையில் அவரின் இடத்தில் களமிறங்கிய ஜடேஜா அவரைப் போலவே அதிரடியாக பேட்டிங் செய்து பல வெற்றிகளைத் தேடி கொடுத்து சென்னையின் புதிய பினிஷராக உருவெடுத்தார்.

- Advertisement -

கேப்டன்ஷிப் அழுத்தம்:
அப்படி அசத்தலாக செயல்பட்டு வந்த அவரின் பேட்டிங் இந்த வருடம் கேப்டன்ஷிப் சுமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதை இதுவரை நடந்த போட்டிகளில் பார்த்தோம். இந்த சூழ்நிலையில் இனிவரும் போட்டிகளில் சென்னை வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தவிக்கும் ஜடேஜாவுக்கு அதை எப்படிக் கையாள்வது என்பது பற்றி முன்னாள் இந்திய அதிரடி வீரர் மற்றும் கேப்டன் வீரேந்திர சேவாக் ஒருசில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

sehwag

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜடேஜாவுக்கு எனது ஆலோசனை என்னவெனில் இது போன்ற அழுத்தங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்பதால் அதை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது. அதைப் பற்றியும் நீங்கள் நினைத்தால் உங்களால் களத்தில் சரியாக சிந்தித்து செயல்பட முடியாது. ஏனெனில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய தருணங்களில் உங்களுக்கு தொடர்ச்சியாக ‘அவர்கள் என்ன சொல்வார்கள்? ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்? சக வீரர்கள் என்ன நினைப்பார்கள்?’ என்பது போன்ற பல தேவையில்லாத எண்ணங்கள் மனதில் வந்து போகும் என்பதால் சரியான முடிவை எடுக்க முடியாது”

- Advertisement -

“உங்களது போனை ஏரோபிளான் மூடில் போடுங்கள். செய்தித்தாள்களை கையில் எடுக்காதீர்கள். தொலைக்காட்சியை ஆப் செய்து வைத்திருங்கள். உங்களது அறையில் மட்டும் மகிழ்ச்சியாக இருங்கள். ஏனெனில் விமர்சனங்களை பார்த்து படித்தால் உங்களது மனது மிகவும் மோசமகிவிடும். உங்களது சமூகவலைத்தள பக்கத்தில் ஏதேனும் பதிவிட விரும்பினால் அதை மட்டும் செய்து விட்டு உடனடியாக மீண்டும் போனை ஏரோபிளான் மூடில் போடுங்கள். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், எம்எஸ் தோனி, யுவராஜ் சிங் போன்ற பலரையும் இது போன்ற கடினமான தருணங்களில் பார்த்துள்ளேன். அப்போது அவர்கள் மொபைல் போன், டிவி, நியூஸ் பேப்பர் போன்றவைகளை தவிர்ப்பார்கள். மேலும் இது போன்ற தருணங்களில் வீடியோ கேம்ஸ் விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என கூறினார்.

Jadeja-2

கேப்டன்ஷிப் பொறுப்பை பற்றிய சிந்தனைகளை தலையில் வைத்துக் கொண்டால் அது களத்தில் விளையாடும் போது சரியான முடிவை எடுக்க விடாது என கூறியுள்ள சேவாக் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் போல சுதந்திரமாக செயல்படுமாறு ஜடேஜாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதிலும் கேப்டனாக இருந்தாலே கண்டிப்பாக டிவி, நியூஸ் பேப்பர் போன்றவை வாயிலாக நிறைய விமர்சனங்களை பார்த்தால் ஓரளவு சுமாராக இருக்கும் மனது கூட கெட்டுப் போய்விடும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ரசல், கெயிலை தொடர்ந்து ஐ..பி.எல் தொடரில் இந்திய வீரராக வரலாறு படைத்த – ஹார்டிக் பாண்டியா

மேலும் அவர் வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாமல் கொடுத்த வேலையில் மட்டும் கவனத்துடன் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் டிவி, சமூக வலைதளம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என கூறினார். தங்களது கடினமான தருணங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி போன்றவர்கள் இதை செய்து தான் வெற்றிகரமானவர்களாக இருந்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement