ரசல், கெயிலை தொடர்ந்து ஐ..பி.எல் தொடரில் இந்திய வீரராக வரலாறு படைத்த – ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

gt

- Advertisement -

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே குவித்தது. குஜராத் அணி சார்பாக கேப்டன் பாண்டியா 50 ரன்களையும், அபினவ் மனோகர் 35 ரன்கள் குவித்தனர்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பண்டியா ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர்கள் யாரும் செய்யாத ஒரு அற்புதமான சாதனையை அதிவிரைவாக செய்து அசத்தியுள்ளார்.

Pandya 1

அதன்படி இன்றைய போட்டியில் 42 பந்துகளை சந்தித்த அவர் ஒரு சிக்சரை மட்டும் அடித்திருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக பல இந்திய வீரர்கள் 100 சிக்சர்களை ஐபிஎல் தொடரில் அடித்து இருந்தாலும் அவர்களில் பாண்டியா மட்டுமே மிகக் குறைவான பந்துகளை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதேபோன்று ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த வீரர்களாக ரசல் மற்றும் கெயில் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேளையில் அவர்களுக்கு அடுத்து மூன்றாவதாக குறைந்த பந்துகளில் 100 சிக்சர்கள் அடித்த வீரர்களின் வரிசையில் ஹர்டிக் பண்டியா தற்போது இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : யுஸ்வேந்திர சாஹலை போதையில் கட்டிப்போட்டது இந்த 2 வெளிநாட்டு வீரர்கள் தானாம் – வெளியான தகவல்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எப்போதுமே சிக்ஸ் அடிக்க தயங்காதவர்கள் என்பது மட்டுமன்றி பவர் ஹிட்டர்களாகவும் சர்வதேச கிரிக்கெட்டில் வலம் வருகின்றனர். அதேபோன்று இந்திய அணியின் பவர் ஹிட்டராக ஹார்டிக் பாண்டியா இருக்கிறார் என்பதற்கு இந்த சாதனையே ஒரு உதாரணம்.

Advertisement