மும்பையில் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியின் போது மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பிராவோ மற்றும் மும்பை அணியை சேர்ந்த பொல்லார்டு ஆகிய இருவரும் ஒரே எண் கொண்ட 400 என்கிற ஜெர்சியை பயன்படுத்தினர். இதற்கான காரணம் என்ன என்று தற்போது வெளிவந்துள்ளது.11வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.
ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடின.
பரபரப்பான போட்டியில் பிராவோவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.இந்த ஐபிஎல் போட்டியில் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு நடந்தது. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் 1லிருந்து 99வரையிலான இரண்டு இலக்கங்கள் கொண்ட ஜெர்சியையே பயன்படுத்தி விளையாடுவார்கள்.
ஆனால் இந்த ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியை சேர்ந்த பிராவோ மற்றும் மும்பை அணியை சேர்ந்த பொல்லார்டு ஆகிய இருவருமே 400 என்கிற ஒரே எண் கொண்ட ஜெர்சியை போட்டுக்கொண்டு விளையாடினர்.இருவரும் ஏன் ஒரே எண்ணை கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடுகின்றார்கள் என புரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.போட்டியின் பின்னர் பேசிய பிராவோ அதற்கான ரகசியத்தை போட்டு உடைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
போட்டிக்கு பின்னர் பேசிய பிராவோ”பொலார்டும், நானும் மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் ஐபிஎல் போட்டிகளில் இருவரும் வேறு வேறு அணிக்காக விளையாடுகின்றோம். இருப்பினும், இருவருக்கும் டி20 போட்டிகளில் ஒருசில ஒற்றுமைகள் இருக்கிறது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 400 போட்டிகளை கடந்த முதல் வீரர் என்கிற பெருமை பொல்லார்டு பெற்றிருக்கிறார். அதேவேளையில் நானும் சர்வதேச போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்.
இந்த இரண்டு சாதனைகளையும் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியைசேர்ந்த வீரர்கள் நாங்கள் என்பதை குறிப்பிடவே இந்த போட்டியில் இருவரும் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்று இருவரும் முடிவுசெய்தோம்.அப்படி தான் முதல் போட்டியில் இருவரும் 400 எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடினோம் என்றார்.