இவர் இருக்கும்போது நான் சி.எஸ்.கே அணி பத்தி நான் பேசுனது தப்பு தான் – வருத்தம் தெரிவித்த ஸ்டைரிஸ்

- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகிற ஏப்ரல் 9ம் தேதி தொடங்கப்பட்ட மே 30ம் தேதி வரை நடக்க இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சென்னையில் வைத்து சந்திக்க உள்ளது. ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வந்து கொண்டிருக்கின்றன. 2019ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டு என அடுத்தடுத்து கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரமான பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

அதேபோல தங்கள் முதல் கோப்பையை கைப்பற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் அணிகள் தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மறுபக்கம் சென்ற ஆண்டு சரியாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு சிறப்பாக ஆடி கோப்பையை கைப்பற்றும் வண்ணத்தில் தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் தீவிரவாதி பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்தைச் சேர்ந்த மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் ஆன ஸ்காட் ஸ்டைரிஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடிக்கும் என்பது குறித்த கருத்துக் கணிப்பை கூறியுள்ளார்.

Styris

நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கணிப்பு

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ்
டெல்லி கேப்பிடல்
கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராஜஸ்தான் ராயல்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

Fleming

இதனை கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஸ்டைரிஸை திட்டித் தீர்த்து வருகின்றனர். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் அவரின் இந்த கருத்திற்கு, ட்விட்டர் மூலம், “ஏன் இப்படிப் பதிவிட்டீர்கள் ஸ்டைரிஸ்” எனக் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள ஸ்டைரிஸ், “தான் இவ்வாறு அணி தரவரிசையை வெளியிட்டது தவறு. சி.எஸ்.கே அணியில் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இருக்கும்போது நான் இப்படிக் கூறியிருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement