கேப்டன்ஷிப் திறமை இருக்கு ஆனால் ரெய்னாவின் சந்தித்த பிரச்சனையும் இருக்கு – இந்திய வீரரை எச்சரிக்கும் ஸ்காட் ஸ்டைரிஸ்

Styris
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22ஆம் தேதியன்று துவங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்ல முழுமூச்சுடன் விளையாட உள்ளது. மேலும் இந்த வருடம் இந்தியாவை வழிநடத்தும் 7-வது கேப்டனாக ஷிகர் தவான் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட உள்ளார்.

shreyas 1

- Advertisement -

அவர்போக ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் போன்ற ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் கொண்ட வீரர்களும் இந்த அணியில் விளையாடுகின்றனர். இதில் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பேட்டிங் திறமைக்கு ஈடாக கேப்டன்ஷிப் திறமைக்காகவும் சமீப காலங்களில் பல முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். ஏனெனில் பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ள அவர் 2019 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று மிகச் சிறப்பாக வழிநடத்தி வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

திறமையும் குறையும்:
அந்த சீசனில் அவரின் கேப்டன்ஷிப் திறமை அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்ட நிலைமையில் 2020 சீசனில் காயமடைந்த காரணத்தால் வெளியேறிய அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை டெல்லி அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது. அதன்பின் 2021 தொடரில் டெல்லி அணியில் சாதாரண வீரராக விளையாடிய அவரை 2022 சீசனில் அந்த அணி நிர்வாகம் மொத்தமாக கழற்றி விட்டது. இருப்பினும் நல்ல பேட்டிங் திறமையும் கேப்டன்ஷிப் அனுபவமும் கொண்ட இளம் வீரராக இருப்பதால் அவரை வாங்குவதற்கு கேப்டன்கள் இல்லாத பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய மும்முனை போட்டி ஏற்பட்டது.

RR vs KKR Sanju Samson Shreyas Iyer

அதில் பெரிய தொகையைக் கொடுத்து வாங்கிய கொல்கத்தா நிர்வாகம் 2022 சீசனில் தங்களது கேப்டனாக நியமித்தது. ஆனால் வீரர்கள் தேர்வில் அந்த அணி நிர்வாகமும் பயிற்சியாளரும் தலையிட்டதால் சுதந்திரமாக செயல்பட முடியாத அவரது தலைமையில் லீக் சுற்றுடன் கொல்கத்தா வெளியேறியது. அதன்பின் இந்தியாவுக்காக சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்ற அவர் பேட்டிங்கில் சுமாராகவே செயல்பட்டார்.

- Advertisement -

குறிப்பாக சுழல் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொள்ளும் அவர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அதுவும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ரொம்பவே தடுமாறி அவுட்டானார். அந்த வகையான பந்துகளுக்கு அவர் தடுமாறுவார் என்பதை தெரிந்த கொல்கத்தா முன்னாள் பயிற்சியாளர் மற்றும் இங்கிலாந்தின் புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் பெவிலியனில் அமர்ந்துகொண்டே ஒற்றை செய்கையில் அவரை காலி செய்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலைமையில் ஷ்ரேயஸ் ஐயரிடம் நல்ல கேப்டன்ஷிப் திறமை இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் பாராட்டியுள்ளார். ஆனால் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா போல் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு மிகவும் தடுமாறுவதில் அவர் விரைவில் முன்னேற்றமடைய வேண்டுமென்று அக்கறையுடன் எச்சரித்துள்ளார்.

Mccullum-and-Shreyas

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஷ்ரேயஸ் ஐயரிடம் கேப்டன்ஷிப் திறமை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனால் வரும் காலங்களில் அவர் இந்தியாவின் கேப்டனாவும் ஆகலாம். அந்த ஒரு காரணத்துக்காகவே அவருக்கு நீங்கள் இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் ஷ்ரேயஸ் ஐயர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறுவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்த அம்சத்தில் அவருக்கு உண்மையான பிரச்சனை உள்ளது”

“அனைத்து அணிகளும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து அவரின் உடலை தாக்கும் அளவுக்கு பவுன்சர்கள் வீசி தாக்குகிறார்கள். அதை தோல் பட்டைக்கு கீழே இழுத்து அடிக்க நீங்கள் முயற்சிப்பது கண்டிப்பாக தீர்வை கொடுக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. கிட்டத்தட்ட சுரேஷ் ரெய்னா போல அவரை எவ்வாறு அட்டாக் செய்ய வேண்டும் என்று அனைத்து அணிகளும் தெரிந்து கொண்டு விட்டன. எனவே அந்த வகையான பந்துகளை எப்படி சமாளிப்பது என்று கற்றுக்கொள்வது இனிமேல் அவரின் வேலையாகும்”

Styris

“அந்த யுக்தியை அவர் தெரிந்து கொண்டால் அவரின் பெயர் தான் இந்திய அணியில் முதலாவதாக இருக்கும். அதுவரை நீங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அதில் அவர் சிறப்பாக செயல்படத் தவறினால் வேறு ஒருவரை தேர்வு செய்யுங்கள். இருப்பினும் அவர் திறமையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார். இதே கருத்தை சமீபத்தில் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement