இந்திய அணி நிச்சயம் இவரை அணியில் சேர்க்கவேண்டும். இல்லனா மறுபடியும் தோல்விதான் – ஸ்டைரிஸ் எச்சரிக்கை

Styris
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. மேலும் மூன்று தொடர்களாக இந்திய அணி சிறப்பான வெற்றிகளை குவித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த போதிலும் தற்போது நியூஸிலாந்து தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து முதல் சரிவை சந்தித்துள்ளது.

Ind-lose

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என்ற இரண்டுமே சரியாக அமையவில்லை. பேட்டிங்கை பொறுத்தவரை அகர்வால் மற்றும் ரஹானே ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினர். மற்றபடி நட்சத்திர வீரரான கோலி புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதுமட்டுமின்றி இளம் வீரர்களான பிரித்திவி ஷா, பண்ட், விஹாரி ஆகியோர் சரியாக விளையாடவில்லை.

மேலும் பவுலிங்கிலும் இஷாந்த் சர்மா மட்டுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, ஷமி மற்றும் அஷ்வின் ஆகியோரது பந்துவீச்சிலும் தாக்கம் இல்லை. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் இந்திய அணியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் இந்திய அணியின் கூறியதாவது : பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததாலே தோல்வி கிடைத்தது.

gill 1

எனவே அணியில் உடனடியாக சுப்மன் கில்லை சேர்க்க வேண்டும். பிரித்திவி ஷாவுக்கு பதிலாக அவரை துவக்க வீரராக ஆக்கலாம் அப்படி இல்லை என்றால் ஆறாவது வீரராக களம் இறங்கும் விகாரியை துவக்க வீரராக களமிறக்கி 6 ஆவது வீரராக கில்லை இறக்கலாம் அப்படி இல்லை என்றால் நேரடியாக கில்லை துவக்க வீரராக இருக்கலாம் எது எப்படியோ ஆனால் இவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement