இதைத்தான் எதிர்பார்த்தோம். தெ.ஆ அணியை வீழ்த்திய பின்னர் நெதர்லாந்து அணியின் கேப்டன் – அளித்த பேட்டி இதோ

Scott-Edwards
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 13-வது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற்ற 15-வது லீக் போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணியானது 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தியது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலாவதாக விளையாடிய நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்க முன்னர் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டது.

- Advertisement -

அப்படி 43 ஓவர்கள் என்கிற அடிப்படையில் களமிறங்கிய நெதர்லாந்து அணியானது முழுவதுமாக 43 ஓவர்களும் விளையாடி 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 78 ரன்களையும், வான்டர் மெர்வ் 29 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது எளிதில் இந்த போட்டியில் வெற்றி பெறும் இன்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே அடித்தது. இதன் காரணமாக 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்த அணி இந்த போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது வெற்றி குறித்து பேசிய நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இந்த தொடருக்கு வரும் முன்னர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வந்தோம். அந்த வகையில் நாங்கள் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. எங்களது அணியிலும் நல்ல வீரர்கள் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : மெகா அப்செட்.. வலுவான தெ.ஆ அணியை வீழ்த்திய நெதர்லாந்து.. 16 வருடம் கழித்து மாபெரும் சரித்திர வெற்றி

இந்த போட்டியில் முதல் வெற்றியில் பெற்றதில் மிகவும் திருப்தியாக நினைக்கிறோம். இன்னும் சில வெற்றிகள் இந்த தொடரில் எங்களுக்கு கிடைக்கும் என்றும் நினைக்கிறோம். ஒரு சில நாட்கள் நாம் நினைத்தது நடக்கும், ஒரு சில நாட்கள் நடக்காமல் போகலாம். அந்த வகையில் நாங்கள் ஒரு பெரிய அணியை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வெற்றி இந்த போட்டியின் மூலம் எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது இதனை அப்படியே கொண்டு செல்வோம் என நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement