ஆஷஸ் டெஸ்ட் : 4 ஓவர்கள் மட்டும் வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸி பவுலர் – இங்கி படுமோசமான தோல்வி

Boland
Advertisement

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்த ஆஸ்திரேலிய அணி தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே போட்டியாக துவங்கி நடைபெற்று வந்தது.

aus vs eng

இந்த போட்டியின் முதல் இனிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாக அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 267 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியை விட 82 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

அடுத்ததாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் சுருட்டி அந்த 82 ரன்கள் கூட அடிக்க விடாமல் வீழ்த்தியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாம் நாள் நாளான இன்று போட்டி வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்தது.

Boland 1

மூன்றாம் நாளான இன்று காலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி விக்கெட் வேட்டையை நடத்த 82 ரன்கள் கூட அடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி இறுதியில் 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட கங்குலி – காரணம் இதுதான்

அதுமட்டுமின்றி இந்த தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா அணியின் சார்பாக அசத்தலாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலந்து இந்த இரண்டாவது இன்னிங்சில் 4 ஓவர்கள் மட்டுமே வீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement