ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட கங்குலி – காரணம் இதுதான்

Ganguly (2)
Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்தடுத்து இந்திய அணியின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக தொடர்ந்து தனது பணிகளை செவ்வனே செய்து வருகிறார். அந்தவகையில் பிசிசிஐயின் தலைவராக போட்டியின்றி தேர்வான கங்குலி இந்திய அணியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அதிரடி காட்டி வருகிறார். அவரது செயல்பாடுகள் அனைத்தும் எப்போதுமே ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்பதனால் அவரின் மீது இன்றளவும் ரசிகர்கள் தங்களது அன்பை செலுத்தி வருகின்றனர்.

Ganguly

பிசிசிஐயின் தலைவராக மாறியதிலிருந்து தொடர்ச்சியாக தனது பணிகளை மும்முரமாக செய்து வரும் கங்குலி ஏற்கனவே இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அதனைத் தொடர்ந்து ஒரு முறை ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ பிளாஸ்டியும் செய்துகொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அவர் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருமுறை தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர் தனது பணிகளுக்காக அவ்வப்போது வெளி நாடுகளுக்கும் பயணித்து திரும்புகிறார் இந்நிலையில் அவரது இந்த இரண்டாவது கொரோனா தொற்று பாதிப்பு RT – PCR டெஸ்டின் போது கண்டறியப்பட்டது.

Ganguly

இப்படி இவர் இரண்டாவது முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட காரணம் யாதெனில் : தனது பணிகளுக்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணிக்கும் கங்குலி அங்கு செல்லும் போதோ அல்லது அங்கிருந்து திரும்பி வரும் போதோ தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த வைரஸ் ஓமைக்கிரான் வைரஸா என்பது குறித்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

இதையும் படிங்க : மூன்றாம் நாள் ஆட்டமாவது நடைபெறுமா? வானிலை அறிக்கை சொல்வது என்ன? – வெளியான வெதர் ரிப்போர்ட்

தற்போது கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள கங்குலி தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement