சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்று உலகசாதனை படைத்தும் காரணமின்றி கழற்றிவிட்டாங்க – குமுறும் இந்திய வீரர்

Manoj Tiwary
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசனின் மாபெரும் இறுதிப்போட்டி பெங்களூருவில் மும்பை மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் அணிக்காக முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி அபாரமாக பேட்டிங் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக காலிறுதி மற்றும் அரையிறுதி ஆகிய அழுத்தமான நாக் – அவுட் போட்டிகளில் சதங்களை அடித்து அசத்திய அவர் பலரின் பாராட்டுகளைப் பெற்றார். அதிலும் வங்கதேச விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் அவர் கிரிக்கெட் மீதான காதலால் அரசியலில் நுழைந்து மக்கள் பணியாற்றும் சமயத்திலும் இடையே தனது மாநிலத்திற்காக ரஞ்சி கோப்பையில் விளையாடியது பலரின் லைக்குகளை அள்ளியது.

Manoj Tiwary 1

- Advertisement -

குறைவான வாய்ப்பு:
கடந்த 2008இல் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான இவருக்கு தொடர்ச்சியான ஆதரவும் கிடைக்காதது பெரிய அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 7 வருடங்களில் 8 வெவ்வேறு தொடர்களில் இந்தியாவுக்காக வெறும் 12 ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளிலும் விளையாடினார் என்பதிலிருந்தே அதை புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக கடந்த 2011இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து இந்தியாவை வெற்றிபெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்ற அவருக்கு அடுத்ததாக இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பு 7 மாதங்கள் கழித்து தான் கிடைத்தது.

பொதுவாகவே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட தொடர்ச்சியாக வாய்ப்பு பெற்றால் தான் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற சூழ்நிலையில் இவர் அறிமுகமாகி விளையாடிய அதே காலகட்டத்தில் விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற அற்புதமான வீரர்களுடன் வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர் போன்ற சீனியர்களும் விளையாடியதால் அப்போதைய இந்திய அணி நிர்வாகத்தால் இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க முடியவில்லை. இந்நிலையில் சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்று உலக சாதனை படைத்த போதிலும் 14 போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மனோஜ் திவாரி இப்போதுள்ள வீரர்களுக்கு போல் அப்போதைய இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து தமக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Manoj Tiwary 2

குமுறும் திவாரி:
சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் ஆரம்பத்தில் இந்தியா தோல்வியடைந்த போதிலும் 5 போட்டிகளிலும் அதே வீரர்களுக்கு வாய்ப்பளித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “4 – 5 போட்டிகளில் இந்திய வீரர்கள் சொதப்பினாலும் அவர்களுக்கு தற்போதுள்ள அணி நிர்வாகம் கொடுக்கும் ஆதரவு நான் விளையாடிய போது எனக்கு கிடைத்திருந்தால் நிச்சயமாக உதவியிருக்கும். ஏனெனில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் சதமடித்த நான் ஆட்ட நாயகன் விருதை வென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அதன்பின் 14 போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. இந்த கேள்வியை அந்த சமயத்தில் நிர்வாகத்தில் இருந்தவர்களிடம் நிச்சயம் நான் கேட்க உள்ளேன்”

- Advertisement -

“அந்த போட்டியில் கூட நான் உலக சாதனை படைத்தேன். அதாவது ஆட்டநாயகன் விருதை வென்ற பின் 14 போட்டிகளில் பெஞ்சில் அவரை வைக்கப்பட்ட என்னை தவிர உலகத்தில் வேறு வீரர்கள் யாரும் இருக்க முடியாது. அதன்பின் கிடைத்த வாய்ப்பலும் 4 விக்கெட்டுகளையும் 65 ரன்களையும் எடுத்தேன். ஆனாலும் எனக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. நீங்கள் முதிர்ச்சியடையும் போது இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்போது ஒரு வீரர் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது அப்போது எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் என்னை நிரூபித்திருக்க முடியும் என்று ஏங்க வைக்கிறது” என்று கூறினார்.

Dravid Rishabh Pant

இப்போதுள்ள ராகுல் டிராவிட் போன்ற ஆதரவை கொடுக்கும் அணி நிர்வாகம் அப்போது கிடைக்காமல் போனது தன்னுடைய துரதிர்ஷ்டம் எனக்கூறும் மனோஜ் திவாரி இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “என்னுடைய சமயத்தில் இந்த அணி நிர்வாகம் இருந்திருந்தால் நிச்சயம் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கும். இப்போதுள்ள வீரர்களை பாருங்கள் அணியில் இடம் பறிபோய்விடும் என்ற பதற்றமின்றி சுதந்திரமாக விளையாடுகிறார்கள்”

“அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அணி நிர்வாகம் ஆதரவளிக்கிறது. இந்த தொடரில் சுமாராக செயல்பட்டதால் தொடரில் நிறைய பேர் ரிஷப் பண்ட் மீது விமர்சனம் வைத்தனர். ஆனால் அவர் நமக்கு வெற்றியைத் தேடி கொடுப்பார் என்ற நோக்கத்தில் இந்திய அணியில் அவர் நிலைத்திருப்பார் என்று ராகுல் டிராவிட் தெளிவாக கூறிவிட்டார்” என வேதனையுடன் கூறினார்.

Advertisement