தோனியை அணியில் இருந்து தூக்குவது சரி தான். எனக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்தா தக்காளி சாசா. சேவாக்கின் கடுமையான விமர்சனம்.

sehwag
- Advertisement -

ஒரு காலத்தில் சச்சின், சேவாக், கங்குலி என மூவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருந்தனர். அவர்களின் ஆட்டத்தை இன்றுவரை ரசிகர்கள் போற்றி வருகின்றனர். ஆனாலும் அவர்கள் இருந்த காலகட்டத்தில் இந்திய அணிக்கு கோப்பைகள் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. தோனி இந்திய அணியின் கேப்டன் ஆனபிறகு இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதன் பலனாக பல கோப்பைகளை இந்திய அணி கைப்பற்றியது.

sehwag

- Advertisement -

அதே போல தோனி கேப்டன் ஆன பிறகு இந்திய அணியின் மூத்தவீரர்களான சேவாக், கம்பீர் போன்றவர்கள் அணியில் இடம்பெறவில்லை. அதற்க்கு முக்கிய காரணம் தோனி தான் என்றும், இளம் வீரர்களுக்கு முக்கிய துவம் அளிக்கிறேன் என்ற பெயரில் சேவாக் மற்றும் கம்பீரை தோனி தான் ஓரம் காட்டினார் என்றும் அவர்களது ரசிகர்கள் இன்றுவரை கூறிவருகின்றனர். இந்த நிலையில் சேவாக், தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில், தான் அணியில் இருந்து எப்படி வெளியேற்றப்பட்டார் என்று கூறியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை இனி பார்ப்போம் வாருங்கள்.

சேவாக் பேசியதாவது, நான் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டேன். ஆனால் அதில் வெளிப்படை தன்மை இல்லை. என்னை அணியில் இருந்து நீக்கும் போது என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அதற்கு முன்பெல்லாம் வீரர்களை நீக்கினால் அவர்களிடம் அதற்கான காரணம் தெரிவிக்கப்படும். ஆனால் 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு அது போன்ற நடைமுறை இந்திய அணியில் இல்லை. ஒரு வீரரை அணையில் இருந்து நீக்கும்போது ஏன் நீக்கினோம், எதிர்காக நீக்கினோம் இப்படி எந்த காரணத்தையும் சரிவர கூறுவது கிடையாது.

அப்படி இருக்கையில், தற்போது மட்டும் ஒரு சில மூத்த வீரர்களை நீக்குவதற்கு மட்டும் தேர்வு கமிட்டி ஏன் இவளவு யோசிக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை. அணியின் எதிர்கால நலனுக்காக சில கசப்பான சமபாவங்களை மூத்தவீர்கள் ஏற்கத்தான் வேண்டும்.அதோடு அணியும் தேர்வு கமிட்டியும் ஒருங்கிணைத்து ஆலோசித்து சில நல்ல முடிவுகளை எடுக்கவேண்டும். ஆனால் அப்படி பட்ட ஆலோசனைகள் எல்லாம் தற்போது நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை என்று சேவாக் கூறியுள்ளார்.

shewag shewag

சேவாக்கின் இந்த கருத்து ஒரு வகையில் பொதுப்படையாக பார்க்கப்பட்டாலும் தோனியின் ஓய்வு குறித்த பேச்சுக்கள் தற்போது வைரலாக இருப்பதால், சேவாக் தோனியை தான் மறைமுகமாக கூறியுள்ளார் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறி உள்ளனர். சேவாக்கின் இந்த பேச்சை கேட்டு தோனி ரசிகர்களும் கடுப்பாகி உள்ளனர்.

Advertisement